அக்குறணையில் பாகிஸ்தான் தூதுவர் (படங்கள்)
(Hfeez + MOHOMED ASIK )
பல்லின மக்களைக் கொண்ட இலங்கையில் முஸ்லிம்கள் ஏனைய இனங்களுடன் சினேக பூர்வ மாக வாழ்வதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஆர்.காசிம் குரேசி தெரிவித்தார்.
(8.7.2013 மாலை) அக்குறணை அல் அஸ்னா மத்திய பள்ளியில் அமைந்துள்ள அக்குறணை நகர ஜமமியத்துல் உலமா சபையுடனான கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது
சியாஹூல் ஹக் ஞாபகார்த்த வைத்திய சாலையின் மூலம் அக்குறணை முஸ்லிம்கள்மட்டு மன்றி பிரதேசத்திலுள்ள அனைத்து இன மக்களும் நன்மை அடைந்து வருவதாகத் தெரிவித்தார். எனவே அதன் குறைபாடுகளை உடன் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அக்குறணை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி எம்.ஏ.எம்.சியாம், டாக்டர் சியாம் பாரூக் உற்பட பலர் அங்கு அவரை வரவேற்றனர். முன்னாள் அக்குறணைப் பிரதேச சபை அங்கத்தவர் ஹமீட் ஏ.காதர் நினைவுச் சின்ன் ஒன்றையும் கையளித்தார்.
அதனை அடுத்து அக்குறணை சியா ஞாபகார்த்த மாவட்ட வைத்திய சாலைக்கு விஜயம் செய்த அவரை கலைக்கப்பட்டுள்ள மத்திய மாகாண சபையின் முன்னாள் அங்கத்தவர் ரிஸ்லி பாரூக், மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்க, வைத்திய சாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி (டி.எம்.ஓ) திருமதி.றஹ்மத் சாலிஹ்
Post a Comment