கொழும்பு பெரிய பள்ளியில் இன்று ரமழான் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு
புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையைப் பார்த்து தீர்மானிக்கும் மாநாடு இன்று (9) செவ்வாய்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளி வாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
புனித ரமழான் நோன்பை தீர்மானிக்கும் வகையில் இன்று மஃரிப் தொழுகை நேரமாகிய 06.31 மணி தொடக்கம் புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம் களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.
இன்றைய தினம் அவ்வாறு தலைப்பிறை யைக் கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரடியாகவோ அல்லது 011-5234044, 2432110, 2390783, மற்றும் 0777366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத் தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் கேட்டுக் கொள்கிறார்.
தகுந்த ஆதாரம் என்றால் என்னெவென்று கொஞ்சம் விளக்கமாக சொல்லவும்
ReplyDelete