Header Ads



மீனவர்களின் கவனத்திற்கு..!

(எம்.எம்.ஏ.ஸமட்)

2014 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் உயிர்காப்புக் கவசம் அணிதல் மற்றும் காப்புறுதி செய்துகொள்ளல் என்பன மீனவர்களுக்கு கட்டாயமாக்கப்படுமென மீன்பிடித்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார்.

பலத்த காற்று மற்றும் பருவகால மழையின் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களின் போது கடந்த  மாதத்தில் 42 மீனவர்கள் வரை உயிரிழந்தனர்.

அன்றாட வருமானத்தை எதிர்பார்த்து மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் மீனவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசினுடையது என்பதனால் மீனவர்கள் மீன்பிடித் தொழில் ஈடுபடும்போது உயிர் காப்புக் கவசத்தைக்  அணிந்து கொள்வதோடு, அவர்கள் தங்களை காப்புறுதி செய்து கொள்ளதும் கட்டாயமாக்கப்படவுள்ளது. இந்நடைமுறையானது எதிர் வரும் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் மீனவர்கள் வானிலை அவதான நிலையத்தின் அறிவுப்புக்களைப் புறக்கணியாது செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  


No comments

Powered by Blogger.