Header Ads



மத்திய மாகாண சபைத் தேர்தலும், 'தம்புள்ளை முதல் மஹியங்கனை வரையான' மந்திரமும்

(ஜே.எம்.ஹாபீஸ் - மூத்த ஊடகவியலாளர்)

எதிர்வரும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் மடவளை மற்றும் அக்குறணை வாழ் மக்களுக்குக் ஒரு தார்மீக் பொறுப்பு உண்டு. இதுகாலவரை அதனைப் பயன்படுத்தியது போல் இம்முறையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதனால் முழு மாகாணத்திற்கும் கௌரவத்தை ஈட்டித்தரமுடியும்.

கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பத்தை விசேடமாக மடவளை மக்களும் (பாத்ததும்பறை தொகுதி முஸ்லிம்கள்) அவர்களுக்கு உதவியாக அக்குறணை மக்களும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் இனி எதிர்பார்ப்பது கடினம்.  அது ஏன் எப்படி என்ற வினாக்களை நாம் பலரிடம் தொடுத்த போது அவர்கள் கூறிய காரணம் பின்வருமாறு அமையப் பெற்றுள்ளது.

மத்திய மாகாணத்தைப் பொருத்தவரை கண்டி மாவட்டத்திற்கு அரசியல் ரீதியாக நல்ல பெயர் உள்ளது. அது முஸ்லிம் வாக்காளர்களுக்கு மத்தியிலும் இல்லாமல் இல்லை. காரணம் மத்திய மாகாண சபை அமைக்கப்பட்ட காலம் முதல் கண்டி மாவட்டப் பிரதி நிதி ஒருவரே முஸ்லிம் மாகாண அமைச்சராக வந்துள்ளார். (அப்துல் காதர், அப்துல் ஹலீம், அமீன், சாபி போன்றவர்கள்)

அத்துடன் கண்டி மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டிற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அங்கத்தவர்கள் தெரிவாகி இருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இப்படிப் பல்வேறு விடயங்களைக் குறிப்பிடலாம். இவை அனைத்தையும்விட எங்களாலும் முடியும் என்ற வகையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 4 அங்கத்தவர்கள் தெரிவாகினர். இவை அனைத்தும் கண்டி வாக்காளர்கள் புத்திசாலிகள் என்பதனைக் காட்டி வருகிறது.

சரி இன்னும் சிலவாரங்களில் இடம் பெறப்போகும் மத்திய மாகாண சபையைப் பொருத்தவரையும் சில அரூடங்கள் கூறப்படுகின்றன. அதன்படி பார்க்குமிடத்து ஐ.ம.சு.முன்னணி வெற்றி பெற்றாலும் கூட ஐ.தே.க. சார்பாகப் போட்டியிடும் முஸ்லிம்களில் மூன்று அல்லது நால்வர் தெரிவாகலாம் என்ற கருத்து பலமாக உள்ளது. ஒரு சிலரின் கூற்றுப்படி ஒரு கட்சி சார்பாகப் போட்டியிடும் 32 அபேட்சகர்களில் ஐ.தே.க. மூலம் ஐவர் தெரிவானாலும் கூட அதில் நான்கு பேர் முஸ்லிம்களாக இருக்க சாத்தியம் உண்டு என்பதாகும்.

காரணம் 'தம்புள்ளை முதல் மஹியங்கனை வரையான' மந்திரத்தை ஜெபித்து ஜெபித்து மக்களது மனங்கள் பண்பட்டுள்ள சந்தர்ப்பமாகும். அதே நேரம் ஸ்ரீல.மு.கா.ஐ நம்புவதற்கும் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே கண்டி மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகள் அதிகம் ஐ.தே.க.ன் பக்கமே சரிய ஆரம்பித்துள்ளது. மறு புறம் ஐ.தே.க. சார்பாக பேரின சமுகம் ஒட்டு மொத்தமாக ஒருவருக்கு அல்லது இருவருக்கு விருப்பு வாக்குகளை அள்ளி வழங்கக் கூடிய அமைப்பு இல்லை. இதனால் முஸ்லிம்களுக்கு சந்தர்ப்பம் அதிகம் எனக் கணித்துள்ள நிலையையே அதிகமானோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் கண்டியைப் பொருத்தவரை முஸ்லிமகள் அதிகம் வாழும் வலயங்களாக மூன்று பகுதிகளை இனம் காணலாம். (1) அக்குறணையும் அதன் சுற்று வட்டாரமும். (2) மடவளையும் அதன் அயற்கிராமங்களும் (உடதலவின்ன, வத்தேகெதர). (3) கம்பளையை மையமாகக் கொண்ட பகுதியாகும்(கெலிஓயா, உடுநுவர போன்றன). இதில் அதிகமானவர்கள் அக்குறணையையும் மடவளையையுமே முன் உதாரணமாகக் கொள்வர். அப்படியாயின் மடவளையும் அக்குறணையும் எக்கட்சிக்கு அதிகம் சார்பாக உள்ளதோ அக்கட்சியையே கண்டி முஸ்லிம்களில் அனேகர் இது காலவரை ஆதரத்ததுள்ளனர். இதன் காரணமாகவேதான் சிலர் இந்த மூன்று பிரதேசங்களில் ஒன்றை பூர்வீகமாகக் கொண்டு தேர்தலில் முன் நிற்கின்றனர். அல்லது மேலே சொன்ன மூன்றில் ஒன்றுதான் தமது ஊர்  என உரிமை கொண்டாடு கின்றனர். அது மட்டுமல்ல மத்திய மாகாண சபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் இரண்டையும் எடுத்துக் கொண்டால் வெற்றி பெற்றவர்கள் இந்த முன்று வலயத்தில் ஒன்றில் உள்ளடங்குகின்றனர். 

முன்னாள் மத்திய மாகாண சபை அங்கத்தவர் லாபீர் ஹாஜியார் மட்டுமே இதற்கு விதிவிலக்காக உள்ளார்.ஆனால் அவருக்கு இந்த மூன்று வலயங்களிலும் இருந்து கனிசமான ஆதரவு கிடைத்தது. ஏனைய அனைத்து பிரதிநிதிகளும் இந்த மூன்று வலயங்களில் ஒன்றிலிருந்துதான் உருவாகி இருக்கினறனர். (அமைச்சர் றவூப் ஹகீம், பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆகியோர் இம்முன்று வலயத்தில் அடங்காவிட்டாலும் அவ்வாறான ஒரு மாயையும் ஏற்படுத்தியே வெற்றி பெற்றனர்). அமைச்சர் றவூப் ஹகீம் அண்மையில் பகிரங்கமாகச் சொன்னார் சிலர் எனது ஊர் மடவளை என்று நினைக்கும் அளவிற்கு எனக்கும் மடவளைக்கும் தொடர்பு உண்டு என்றார். 

அதனாற்தான் போலும் 10 பேர் தமது உயிரைத் தாரை வார்த்தனர். அதேபோல் பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் செல்லுமிடமெல்லாம் 'மகே சீயாவன செய்யத் முஹம்மட் முஸ்தபாகே உபன்கம மடவல' (எனது பாட்டனார் செய்யத் முஹம்மத் முஸ்தபாவின் பிறந்த கிராமம் மடவலை) என்று அடிக்கடி பெருமையாகக் கூறிக்கொள்வார். இவர்களது வெற்றியைத் தீர்மானித்த காரணிகளில் இவையும் ஒன்றாகும்)

ஆனால் இதுகாலவரை மடவளையைப் பொருத்தவரை ஒரு பிரதேச சபைத் தலைவர் கூட மடவளையில் பிறக்கவில்லை. 

கம்பளையை மையமாகக் கொண்ட காதர் ஹாஜியார், றபீக் ஹாஜியார், அம்ஜட் ஹாஜியார், உவைஸ் ஹாஜியார், மர்ஜான் மாஸ்டர், நயீமுல்லா, அமுpன் ஹாஜியார், றவூப் ஹாஜியார் என்று பட்டியல் செல்கிறது. அதேபோல் அக்குறணையை மையமாகக் கொண்டு ஏ.ஸீ. சாகுல் ஹமீட், எம்.எச்,ஏ.ஹலீம், சாபி ஹாஜியார், ரிஸ்வி பாருக், உபைதுல்லா, போன்ற அரசியல் வாதிகளின் பிரவேசத்தைப் பார்க்கமுடியும். ஆனால் மடவளை இவ்வாறான ஒரு அரசியல் தலைமையை இதுகாலவரை உருவாக்கவில்லை.

அதற்கு சற்று தொலைவில் இருந்து பார்க்கும் போது ஜனாப் மஹ்மூத் றஹ்மத்துல் மலீக் மட்டும் சிலகாலம் பாத்ததும்பறைப் பிரதேச சபையில் பிரதித் தலைவராக இருந்தார். அவர் மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியின் வாயிலுக்கு வந்து கை நழுவியுள்ளார்.

இவர் 1997ம் ஆண்டு பாத்ததும்பறைப் பிரதேச சபையில் ஐ.தே.க.. சார்பாகப் போட்டியிட்டு சுமார் 5500 வாக்குகளைப் பெற்றார். பாத்ததும்பறைப் பிரதேச சபை அங்கத்தவர் ஒருவர் அவ்வருடம் பெற்ற அதி கூடிய வாக்குகள் அதுவாகும்.அதேபோல் 2002ம் ஆண்டும் 5918 வாக்குகளைப் பெற்று அதி கூடிய வாக்காகப் பதிவு செய்து கொண்டார். 2004ம் ஆண்டு காலப் பகுதியில் பிரதித் தவிசாளராகவும் இருந்தார்.

2004 ம் ஆண்டு மகாண சபைக்கு ஐ.தே.க. சார்பாகப் போட்டியிட்டு 12 000 விருப்பு வாக்குகளைப் பெற்று மத்திய மாகாண சபையின் விழிம்பில் இருந்தார்.

இதைவிட பெரும் தோட்டப் பாடசாலைகள் விடயத்தில் ஏற்பட்ட சர்ச்சையின் போது பாராளுமன்ற அங்கத்தவர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களைத் தலைவராகக் கொண்ட கமிட்டியில் அப்துல் மலீக் அவர்கள் செயலாளராக இருந்து நீதிமன்றம் வரை சென்றுள்ளார். அப்போது இவருக்கு உதவியாக சட்டத்தரணிகளான ஏ.எம்.வைஸ், மற்றும் ஜிப்ரி, அத்துடன் கவாபூஷணம் புன்னியாமீன் ஆகியோரும் பங்களிப்புச் செய்ததன் விளைவாக பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா சட்டத்தரணி என்ற வகையில் சமரசம் செய்து 625 ஆசிரிய நியமனங்களைப் பெற்றுக்கொள்ள வழிகோலினார்.

அத்துடன் தேர்தல் தொகுதி நிர்ணயம் தொடர்பாக கண்டி மாவட்ட முஸ்லீம்கள் (ஐ.தே.க.) அமைத்த தெரிவுக்குழுவிலும் அல்ஹாஜ் மலீக் அங்கத்தவராக இருந்துள்ளார்.

இவ்வாறு ஐ.தே.க.யை விட்டு ஓடாது தொடர்நதும் அனைத்துச் செயற்பாடுகளிலும் பங்கு கொண்டுள்ள இவர்  அரசியல் ரீதியில் பரிச்சய முள்ளவர். 

இன்று கண்டி மாவட்டம் முழுவதும் முஸ்லிம் போட்டியாளர்கள் போட்டா போட்டி இட்டவண்ணம் தமது சுவரொடகளை ஒம்டி வருகின்றனர். அவற்றுள் முன் நிற்பது நம்மவர்களது சுவரோட்டிதான். ஆனால் எம்.ஆர். மலீக்குடைய ஒரு சுவரொட்nயை யாவது காண முடியவில்லை. இதற்குப் பலகாரணம் உண்டு. ஒன்று அவர் மிக அமைதியானவர். அடக்கமானவர். ஒரு உலமாவின் மகள். சமய கருத்துக்களைக் கொண்டவர். எளிமையான வாழ்கை நடத்துபவர். எனவே பகட்டு வாழ்கையோ அல்லது எம்படியாவது பணமீட்டவேண்டும் எனக் கருதி பணத்தை தேடி அழிப்பவருமல்ல. இதனால் அவர் பற்றிய  விளம்பரம் குறைவாக இருந்தாலும் பாத்ததும்பறைப் பிரதேசத்திலுள்ள சுமார் 15 000 முஸ்லிம் வாக்குகளுக்கு உரிமை கோரக் கூடிய நிலையில் இருக்கிறார். மகாண சபையைப் பொருத்தவரை பதினையாயிரம் வாக்கு என்பது மிகப் பெரிய தொகையாகும். மேற்படி முஸ்லிம் வாக்குகளை ஒருவர் பெற்றுக் கொள்வாராயின் அதுவே அவருக்குப் போதுமானதாகும்.

முழு பாத்ததும்பறை முஸ்லிம் மக்களும் தமது வாக்கை அவருக்கு வழங்குவார்களாயின் சிங்கள சமூகத்திற்கு மத்தியிலும் அவருக்குள்ள செல்வாக்கைக் கொண்டு பாத்ததும்பறையில் மட்டும் 20 000 வாக்குகளை இலகுவாகப் பெறலாம். இதனுடன் ஏனைய முஸ்லீமவாக்குகளும் சேருமிடத்து அது பெரும் தொகையாகி விடும். எனவே மலீக் ஒரு பிரதி நிதியாகத் தெரிவாகின் அது மடவளையில் இது காலவரை இருந்த அரசியல் வெற்றிடம் பூரணப்பட இடமுண்டு எனப் பலர் தெரிவித்தனர்.

ஆதே நேரம் இந்த ஒற்றுமைகாரணமாக கண்டி மாவட்டத்தில் 4 அல்லது 5 முஸ்லிம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்ள வசதியாக அது அமையும் எனப் பலர் தெரிவித்தனர்.


6 comments:

  1. நல்ல தெளிவான அறிவூட்டலும், வழிகாட்டலும்.

    உண்மையில் பாத்ததும்பற பிரதேச முஸ்லிம் வாக்காளப் பெருமக்கள் இவ்வாறான அமைதி வழி அரசியல்வாதிகளுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

    அப்துல் மலீக் அவர்களின் தூய எண்ணங்களுக்கு அழ்ழாஹ் அருள் பாலிப்பானாக!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. இதைப்படித்த பின்னராவது எமது மக்களுக்கு ஆவேசம் வர வேண்டும் எமக்கென பெயர்சொல்வவதட்கு எமது பிரதேச சபைக்கு ஒரு தலைவரை தெரிவு செயய, ஒன்று பட்டால்தானே உன்டு வாழ்வு.

    ReplyDelete
  3. dont forget Asath Sally...he is the only leader for MUSLIMS.....he will be in sha allah contesting from KANDY DISTRICT.

    ReplyDelete
  4. Very good research on pathathumbara and Madawela, Please cast your votes as adviced Insha Allah you will win, Please show your fruit full unity.to Al-haj,Mr.Hon.M.R.Malik insha Allah will win. Duaaa and help him please.

    ReplyDelete
  5. எத்தனை உறுப்பினர் இருந்து என்ன பயன்? அண்மையில் மத்திய மாகாண சபை பயிலுனா் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனக் கடிதம் வழங்கினார்கள் அப்பொழுது முஸ்லிம் பெண் பட்டதாரிகளிம் நீங்கள் உங்கள் அபாயாவை கழட்டுங்கள் எங்களது அலுவலகத்திலேயே பணிபுரியலாம் இல்லை என்றால் நாங்கள் நியமனம் தரும் ஊருக்கு போங்கள் என்று சொன்னது மட்டுமல்லாமல் அதிகமானவர்களை வெவ்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பினார்கள்.இது எல்லாம் கலைக்கப்பட்ட மாகாணசபை உறுப்பினர்களுக்கும் தெறியும்.அரசின் பக்கம் இருப்பவர்கள் அரசு பக்கம் சாடியவர்கள் என்ன செய்தார்கள்?இன்ஸாஅல்லாஹ் மறுமையிலாவது இவர்கள் பதில் கூறவேண்டும்.

    ReplyDelete
  6. இன்று முஸ்லிம்களுக்கு உலக அளவில் சோதனைகளும் வேதனைகளும் இருந்துகொண்டே இருக்கிறது, இதை ஒரு ஒரு குடும்பமாக பிரித்து பார்த்தாலும் ஊர் ஊரக பிரிதுப்பார்த்தாலும் நாடு நாடக பிரிதுப்பார்த்தாலும் கிடைக்கும் விடை ஒன்றுதான் "எங்களுக்கு எங்கள் ரசூல் ஸல் அவர்கள் கட்டித் தந்த அழகிய முன்மாதிரிகள் இருக்க வேறு சில முன்மாதிரிகளை பின்தொடரும் போது அதற்கமைய அல்லாஹ்விடத்திலிருந்து சோதனைகளும் வேதனைகளும் வந்து சேருகிறது". நாம் நமது வாழ்வில் எவ்வளவு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்பதை என்களின் நடைமுறைகளை சற்று சிந்தித்து பார்ப்போமானால் தெளிவடைந்து விடுவோம். எங்களில் எத்தனை பேர் அல்லாஹ்வின் பெயர்களில் உள்ளபடி நம்பிக்கை கொண்டு செயற்படுகிறோம்,
    லாஇலாஹ "இல்லல்லாஹ்" என்பதோடு நின்று விடுகிறோம்,ரிஸ்க் அளிப்பவன் யார்,
    பாதுகாப்பவன் யார்,அறிவை தருபவன் யார் என்றெல்லாம் யாரவது கேட்டால் மாத்திரம் சொல்லக்கூடிய கிழிப்பிள்ளையாட்டம் இருக்கிறோமே தவிர வாழ்க்கையில் எம்முடைய சக்தியை நம்பியவர்களாக வாழ்கிறோம். சில வேளைகளில் வெற்றி கிடைப்பது போன்று இருப்பினும் தோற்றுப்போனவர்கள் என்பதுதான் உண்மை என்பதை பல நேரங்களில்
    எங்களின் அறிவு சொல்லும் போதும் சிந்திக்க தவறி விடுகிறோம், இது எதனால்? ரசூல் ஸல் அவர்களின் அழகிய முன்மாதிரி எங்கள் குடும்பங்களில் இல்லாமையே! வீட்டில் இஸ்லாம் வரும் போது பெண்களும்,ஆண்களும் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பார்கள்,தேவையற்ற பயணங்களை பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பார்கள். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பார்கள், தேவையற்ற காட்ச்சிளை பார்ப்பதை விட்டும் தவிர்ப்பார்கள்,
    இவைகளை தம் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்பார்கள்.மேற்கூறியவைகள் யாரிடத்தில் இல்லையோ அவர்களிடத்தில் இஸ்லாமிய வாழ்க்கை இல்லை என்று தான் அர்த்தப்படுத்த வேண்டும்.

    இன்றைய இலங்கையில் சிலர் தமது கருத்துக்களை அச்சம் கலந்ததும்,யாருக்கோ வால்பிடிக்கும் நோக்கும் மற்றும் தமது தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகக்கூடாது எனும் நோக்கிலும் இருப்பதை நான் கானுகிறேன். நேற்றைய (1982 முதல் சிங்கள பல மண்டலய),இன்றைய பிரச்சினைகள் அணைத்துமே இஸ்லாத்துக்கும் இஸ்லாமியர்களுக்குமானது இதில் விட்டுக்கொடுப்புகளுக்கோ,பணிந்து போவதற்கோ இடமில்லை. தனக்கும் தனது குடும்பத்துக்கும்,சொத்துக்கும் பிரச்சினைகள் வரும் போது துடிக்கும் முஸ்லிம்!,இஸ்லாத்துக்கு வரும் போது விட்டு ஓடப்பார்ப்பதை இட்டு மணம் வேதனைப்படுகிறது. உங்களது (ஆயுதங்கள்)தயாரான நிலையிலேயே இருக்கட்டும் என்கிற கருத்தில் குர்ஆன் சொல்கிற போது இவர்கள் சொல்கிறார்கள் ”செய்யாதே செத்து மடி” “எதிர்க்காதே எதிரி ஏரிமிதிக்கட்டும்” என்றும்.,அத்துடன் நேற்றும்,இன்றும் எங்களுக்கு ரோகிங்கிய உதாரணம் இருந்தும் கைகட்டி காத்திருக்க நினைக்கிறோம்.1983 ல் கொஞ்சமாக பாதிப்புக்குள்ளான நாம்(முஸ்லிம்கள்)இது வரை அந்த இழப்புகளுக்கு குறைந்த பட்சம் இழப்பீடு கூட கிடைக்காத நிலையில் இருக்கிறோம்.உள்நாட்டிலும்,வெளிநாடுகளிலிருந்தும் கூஜா தூக்கும் அன்பர்களுக்கு இலங்கையில் ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் இனவாதிகளின் கூட்டுச்சதி திட்டமிடப்படுவதை தெரிந்து கொள்வதற்கு மார்க்கமில்லைதான்! 1982ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிங்கள பல மண்டல ஐ.தே.க.+S.L.F.P மற்றும் சில கட்சிகளின் கூட்டுப்பராமரிப்பில் வளர்ந்து இன்று பெரு மரமாக வளர்ந்து 25 க்கும் அதிகமான கிளைகளைக்கொண்டுள்ளது.ஆனால் நாம் (முஸ்லிம்கள்)??? இருந்த இடக்கிலேயே இருக்கிறோமா ?அல்லது பல கூறுகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறோமா.???,எப்போது குர்ஆனையும் ஹதீஸையும் மட்டும் ஏற்று ஒன்று படுகிறோமோ அன்றுதான் உண்மையான இஸ்லாமியனாக ஆக முடியும் என்பதை அன்புடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.அத்துடன் கோடாரிக்கம்புகளை நம்பி ஏமாந்து இஸ்லாத்துக்கு மாறு செய்வதை விட்டு சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க சரியான பாதையை தேர்ந்தெடுப்போமானால் அது மிகச்சரியானதாக இருக்கும் அந்த சரியான பதையை எமக்கு அறிவிப்பதற்கு சரியானவர்கள் யார்??? இக்கேள்விக்கு விடையானது அல்லாஹ்வும் அல்லாஹ்வின் ரசூல் என்பதை விட வேறு இருக்க முடியாது என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்தாகும்.

    ReplyDelete

Powered by Blogger.