முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை - நோர்வே தூதுவர் விபரம் கேட்டறிந்தார்
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
தற்காலத்தில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து இலங்கைக்கான நோர்வே உயர் ஸ்தானிகருக்கும் காத்தான்குடியிலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல்
இலங்கைக்கான நோர்வே புதிய உயர் ஸ்தானிகர் கிரீட் லோசனுக்கும் காத்தான்குடியிலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை காலை 08.30மணியளவில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள புதிதாக திறக்கப்படவுள்ள பீச் கொடேஜ ரெஸ்டுரண்டில்; இடம்பெற்றது.
இச்சந்திப்பில் ஸ்ரீ.ல.மு.கா உயர்பீட உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான யூ.எல்.எம்.முபீன்,முன்னாள் உதவி அரசாங்க அதிபர் ஷரீப்,வழக்கறிஞர் உவைஸ்,மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழான்,முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்தியப் பொறுப்பாளர் ஜுனைட்(நளீமி),1990ம் ஆண்டு பாசிசப் புலிகளால் நடாத்தப்பட்ட படுகொலை இடம்பெற்ற பள்ளிவாயல் தலைவர் சுபைர் சீ.சீ,முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்மாப் பள்ளிவாயல் தலைவர் மர்சூக் அஹமட் லெப்பை மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் பரும் கலந்து கொண்டனர்.
இதன்போது முஸ்லிம்களுக்கு தற்காலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விரிவாக பேசப்பட்டதுடன் முஸ்லிம்களுடைய காணி அபகரிப்பு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டன.
Post a Comment