நாவலடி கிராம மஸ்ஜிதுல் அந்நூர் பள்ளிவாயல் உடைக்கப்பட்டுள்ளது (படங்கள்)
(நஷஹத் அனா)
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்றக் கிராமமான நாவலடி கிராமத்தில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அந் நூர் பள்ளி வாயல் நேற்று (30.06.2013) இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.
இப் பள்ளிவாயலில் கடமை புரியும் மௌலவி எச்.எம்.இர்பான் கருத்துத் தெரிவிக்கையில் பள்ளி வாயலில் நேற்று இரவு இரவு நேரத் தொழுகை முடிந்து பள்ளி வாயலை இரவு 09 மணியளவில் மூடிவிட்டு சென்ற பள்ளிவாயலில் கடமை செய்பவர் இன்று அதிகாலை தொழுகைக்காக காலை 04 மணியளவில் பள்ளிவாயலுக்கு வந்த போது பள்ளிவாயல் உடைந்து காணப்பட்டதகவும் பள்ளி வாயலில் உள்ளுக்கு இருக்கும் ஊண்டியலும் வெளியில் இருக்கும் ஊண்டியலும் உடைக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டுள்ளதுடன் அலுமாரி உடைக்கப்பட்டு அதனுல் இருந்த பொருட்களை வெளியே எரிந்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விஸாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முஸ்லிம்கள் அச்சமடையத் தேவையில்லை என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார்' - பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் பிரார்த்திப்போம் எம்மையும் எமது உரிமைகளையும் இறைவன் பாதுகாக்கவேண்டுமானால் நாம் அதிகம் அதிகம் எப்போதும் நம் அனைவருக்கும் பிரார்த்திப்போமாக.....
ReplyDeleteஅல்லாஹ்வின் வீட்டை உடைத்ததை அது அல்லாஹ்வே சரியான நேரத்துக்கு பார்த்துகொள்வான்.
ReplyDeleteஇறைஇல்லத்தை உடைத்தவன்களை அவனோ பார்த்துக்கொள்வான் நாம் ஐவேளையும் இருகரம் ஏந்திப் பிராத்திப்போமாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்
ReplyDelete