எகிப்தில் பிரச்சினையை தடுக்க அல்அஸ்ஹர் பல்கலைகழகம் தலையிடுகிறது
எகிப்தின் பிரச்சினையை தடுக்க அல் அஸ்ஹர் பலகலைகழகம் ஹிஸ்புன்நூர் கட்சியின் தீர்வுப்பொதியை ஏற்றுக்கொண்டுள்ளது.
எகிப்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக அந்நூர் கட்சி வைத்த தீர்வு யோசனைகளை அல் அஸ்ஹர் பலகலைகழகத்தின் “ ஷைஹுள் அஸ்ஹர்” அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
ஆட்சி கவிழ்க்கப்பட்ட முர்சி அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நடக்கும் மோதலை தடுக்க தனது கண்காணிப்பில் கீழ் அந்நூர் கட்சி வைத்த தீர்வு யோசனைக்கு இணங்க ஒரு குழு அமைத்து அதன் ஊடாக சுமூகமான தீர்வுகளை எட்ட முயற்சி செய்ய உள்ளதாக” ஷைஹுள் அஸ்ஹர் அஹ்மத் தய்யிப் அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள்.
Post a Comment