ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி பிரதேச பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
(நஷ்ஹத் அனா)
ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்று (24.07.2013) இடம் பெற்றது.
ஓட்டமாவடி அல்-கிம்மா நிறுவனத்தின் அனுசரனையில் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைகளினதும் வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன் இவ் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இடம் பெற்றது.
வீதிகளில் இருந்த குப்பைகளை அகற்றியதுடன் வீடு வீடாகச் சென்று டெங்கு பரவக் கூடிய இடங்களை இணங்கண்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் டெங்கு நோயினால் ஏற்படும் தாக்கம் தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் பங்குபற்றிய ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் 44 பேருக்கு பகற்போசனத்துடன் ஒருவருக்கு தலா 500 ரூபாய் வீதம் அல்-கிம்மா நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.
Post a Comment