பொத்துவில் பகுதியில் திறமைகாட்டிய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு
(ரீ.கே.றஹ்மத்துல்லா)
பொத்துவில் பிரதேச சபையின் புதிய நிருவாகத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி இம்முறை சித்தியடைந்த தரம் 05 மாணவர்களையும், கற்பித்த ஆசியர்களையும் பாராட்டிக் கௌவிக்கும் நிகழ்வு நேற்று மாலை (30) பொத்துவில் அஸ்ரப் ஞாபகார்த்த அதாஉல்லா அரங்கில் நடைபெற்றது.
பொத்தவில் பிரதேசசபையின் தவிசாளர் எம்.எஸ்.வாஸித் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பபை கலந்து கொண்டார். மற்றும் அதிதிகளாக உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சரின் பொத்தவில் பிரதேச இணைப்பாளா ஏ.பதுர்காண், உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ.அப்துல் அஸீஸ் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், கலந்து கொண்டனர்.
இதன் போது தமிழ் தினப்போட்டியில் தேசிய மட்டத்திற்குத் தெரிவான அப்துல் மலிக் அப்துல் றஹ்மானைப் பாராட்டி அமைச்சர் பரிசில் வழங்கி வைத்ததுடன் அதிதிகளினால் இம்முறை பொத்தவில் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து சித்தியடைந்த 73 முஸ்லிம், தமிழ் மாணவர்களுக்கான நினைவப்பரிசில் மற்றும் வங்கியில் பணவைப்பச் செய்யப்பட்ட பாஸ் புத்தகங்களும் வழங்கபட்டன.
செய்தியாளரின் கவனத்திற்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள அரங்கம் பொத்துவிலில் இல்லை , அஷ்ரப் ஜாபகார்த்த மண்டபம் மட்டுமே இங்குள்ளது .
ReplyDelete