Header Ads



இத்தாலியில் கறுப்பு இன அமைச்சர் மீது இனவெறி தாக்குதல்..!

இத்தாலியில் கறுப்பர் இன பெண் மந்திரி மீது வாழைப்பழங்களை வீசி இனவெறி தாக்குதல் நடந்தது. இத்தாலியில் ஒருமைப்பாடு துறை மந்திரி ஆக இருப்பவர் சிசிலி கெய்ஞ்ச். இவர் காங்கோ நாட்டை சேர்ந்தவர். கறுப்பர் இனத்தை சேர்ந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் மந்திரி ஆக நியமிக்கப்பட்டார்.

ரோம் நகரில் அவரது கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற அவர் மேடையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு மர்ம நபர் இவர் மீது வாழைப் பழங்களை வீசி தாக்குதல் நடத்தினார். ஆனால், அந்த பழங்கள் அவர் மீது விழவில்லை. ஆனால், மேடையில் பேசிக் கொண்டிருந்த சிசிலி அருகே விழுந்தது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இச்சம்பவம் அவர் மீது நடந்த இனவெறி தாக்குதலாக கருதப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம்தான் இவர் மந்திரி ஆக நியமிக்கப்பட்டார்.

அதில் இருந்தே முதல் கறுப்பர் இன மந்திரி ஆன இவர் மீது தினசரி இனவெறி தாக்குதல்கள் மற்றும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இம்மாத தொடக்கத்தில் வெளிநாட்டவர் எதிர்ப்பு கட்சியினர் செனட்டர் இவரை ஒரங்குட்டான் குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்தார்.

அதற்கு எதிர்ப்பு கிளம்பவே அவர் மன்னிப்பு கேட்டார். கடந்த மாதம் இதே கட்சியை சேர்ந்த கவுன்சிலர் பேசும்போது, இவரை கற்பழிக்க வேண்டும் என்றார். இதற்காக ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட அவர் தற்போது பதவியில் இருப்பதால் தண்டனை அனுபவிப்பதில் இருந்து விலக்கு பெற்றுள்ளார்.

No comments

Powered by Blogger.