அஸ்வர் எம்.பி.யை தூண்டிய அமைச்சர் தினேஷ் குணவர்தனா
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றிக் கொண்டிருந்தார்.
சுமந்திரன் எம்.பி. உரையாற்றிக் கொண்டிருந்த போது ஆளும் கட்சியின் ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. இடையிடையே ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பிக் கொண்டிருந்தார்.
ஒரு சந்தர்ப்பத்தில் சுமந்திரன் எம்.பி. தனது உரையின் போது அஸ்வர் எம்.பி.யின் அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் தினேஷ் குணவர்தனவைப் பார்த்து ஆளும் கட்சியின் பிரதம கொறடா தனது ஆசனத்தில் இருக்காது பின்வரிசையில் அமர்ந்து அஸ்வர் எம்.பி.யை தூண்டிவிடும் செயற்பாட்டினை மேற்கொண்டிருக்கின்றார் எனக் கூறினார்.
சுமந்திரன் எம்.பி. இப்படிக் கூறியதும் அமைச்சர் தினேஷ் குணவர்தன உடனடியாக எழுந்து முன்வரிசையிலுள்ள தனது ஆசனத்திற்கு வந்து அமர்ந்து கொண்டார்.
Post a Comment