நாட்டிலுள்ள சகல பாடசாலை மாணவர்களையும் காப்புறுதி செய்ய திட்டம்
(Nf) நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களையும் அடுத்த வருடம் முதல் காப்புறுதி செய்யவுள்ளதாக கல்வி சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கான சகல திட்டங்களும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று சீதாஎலிய பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்ததுடன் பத்து மாணவர்கள் காயமடைந்தமை, தேசிய அருங்காட்சியகத்தின் படிக்கப்பட்டு உடைந்து வீழ்ந்ததில் மாணவர்கள் சிலர் காயமடைந்தமை போன்ற சம்பவங்களை ஆராய்ந்த பின்னருமே மாணவர்களை காப்புறுதி செய்யும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதுவரை உரிய வேலைத்திட்டமொன்று காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் பிரகாரம் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க மேலும் கூறியுள்ளார்.
Post a Comment