Header Ads



பெற்ற குழந்தையை கொலைசெய்து மலசலகூட குழிக்குள் போட்ட திருமணமாகாத தாய்

(Adt) தியத்தலாவ ஆதர வைத்தியசாலை வைத்தி அதிகாரி வழங்கிய தகவல் ஒன்றிற்கு அமைய பிறந்த குழந்தை ஒன்று மலசலகூட குழிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

இக்குழந்தை கொலை செய்யப்பட்டு மலசலகூட குழிக்குள் போடப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

கடந்த 23ம் திகதி பகல் குறித்த குழந்தையை தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ளார். அதன்பின்னர் அவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த போது குழந்தை பெற்ற விடயம் தெரியவந்தது. 

28 வயதுடைய திருமணமாகாத பெண்ணே இவ்வாறு குழந்தையை பெற்று குழியில் வீசியுள்ளார். 

குழந்தையின் சடலம் 26ம் திகதி மீட்கப்பட்டு 27ம் திகதி பிரேத பரிசோதனை இடம்பெற்ற போது குழந்தை கொலை செய்யப்பட்டு மலசலகூட குழிக்குள் வீசப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். 

பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.