'அரசாங்கம் ஏனைய கட்சிகளை பலவீனப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கிறது'
அரசாங்கம் ஏனைய கட்சிகளை பலவீனப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின்பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகளின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, கட்சியின் ஏனைய உறுப்பினர்களையும், ஆதரவாளர்களும் மனதளவில் பலவீனப்படுத்தி, தேர்தல்களில் வெற்றி பெறும் சூழ்ச்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்ச்சி தற்போது வெளிப்பட்டுள்ளது. தொடர்ந்து இதனை மேற்கொள்ள முடியாது என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அப்ப நீயும் அரசாங்கத்த பலவீனப்படுத்த உன்னால முடிஞ்த செய்!! இல்லாட்டி பொத்திக்கிட்டு படு.
ReplyDelete