ஒசாமா பின்லேடன் பயன்படுத்திய துப்பாக்கி அமெரிக்காவில் காட்சிக்கு வைப்பு
அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை நிறுவனமான சி.ஐ.ஏ. விர்ஜினியாவில் உள்ள லாங்லீ நகரில் கண்காட்சியை அமைத்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகளில் பயன்படுத்திய மற்றும் கைப்பற்றிய ஆவணங்கள் மற்றும் கருவிகள் இடம் பெற்றிருந்தன.
அவற்றில் அல்கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் பயன்படுத்திய ஏ.கே. 47 ரக துப்பாக்கியும் உள்ளது. பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கியிருந்தபோது கடந்த 2011–ம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் நேவி சீல் என்ற அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவரது உடல் அருகே கிடந்த ஏ.கே. 47 துப்பாக்கிதான் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
அது ரஷியாவில் தயாரிக்கப்பட்டது. அதே நேரத்தில் அபோதாபாத்தில் பின்லேடன் பதுங்கி இருந்த பங்களாவின் மாதிரியும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment