Header Ads



நீதியமைச்சு கவனம் செலுத்துமா..?

(எம்.எம்.ஏ.ஸமட்)

மத்தியஸ்தர் சபைக்கான உறுப்பினர் தெரிவின்போது தொழில்வாண்மை உளவள ஆலோசகர்களையும் உள்ளவாங்குவதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென நீதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. இவ்வாலோசனை தொழில்வாண்மை உளவள ஆலோசகர்களினால் வழங்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சினால் உருவாக்கப்பட்ட  ஏறக்குறைய 319 மத்தியஸ்தர் சபைகள் நாடுபூராகவும் இயங்குகின்றன. நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படாத பல வழக்குகள் மத்தியஸ்தர் சபையில் தொடரப்படுகிறது. இம்மத்தியஸ்தர் சபையில் தொடுக்கப்படும் அதிகளவிலான சமூகப் பிரச்சினைகளில் குடும்பப் பிரச்சினைகளே மிகக் கூடுதலாகத் தாக்கல் செய்யப்படுவதாக மத்தியஸ்தர் சபையில் உள்ளோர் குறிப்பிடுகின்றனர்.

நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் அதிகளவிலான வழக்குகள்  வெற்றி தோல்வி என தீர்வாக வரும் நிலையில மத்தியஸ்தர் சபையில் தொடரப்படும் வழக்குகள் தோல்வியென்ற நிலையைத் தவிர்த்து இரு தரப்புக்கும் வெற்றி என்ற நிலையை அடைகிறது.

சமூகப் பிரச்சினைளைத் தீர்ப்பது தொடர்பிலும் பிரச்சினைக்குரியவர்களைக் கொண்டே பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான ஆளுமைகளை அவர்களிடத்தில் கட்டியெழுப்புவதற்குரிய நுட்பங்கள், திறன்கள், திட்டங்களை அவர்களிடத்தில் உருவாகுவதற்கு துணை நிற்பதில் தொழில்வாண்மை உளவள ஆலோசகர்களினால்  இயலுமானதாகவிருக்கும்.

மேலும், உளவள ஆலோசகர்கள் மத்தியஸ்தர் சபையில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றபோது, இச்சபையில் தொடுக்கப்படுகின்ற தனிநபர், குடும்ப மற்றும் குழுக்கள் தொடர்புபட்ட பிரச்சனைகளுக்குத் தொழில்வாண்மை உளவள ஆலோசனையினூடாக   எவருக்கும் பாதிப்பில்லாத வகைளில,; குறிப்பாக குடும்ப மற்றும் குழுக்கள் தொடர்பான பிரச்சினைகளில் வெற்றி-வெற்றி என்ற நிலையில் அவரவர் பிரச்சினைகளுக்கான தீர்வை பெறுவதற்கு இத்தொழில்வாண்மை உளவள ஆலோகர்களினால் முடியுமாக இருக்கும்.

இவற்றைக் கருத்திற்கொண்டு மத்தியஸ்தர் சபைகளின் உறுப்பினர் தெரிவின்போது தொழில்வாண்மை உளவள ஆலோசகர்களையும் உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு தொழில்வாண்மை உளவள ஆலோசகர்களினால் நீதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது,

இதேவேளை, வடக்குக் கிழக்குப் பிரதேங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீளவும் குடியமத்தப்பட்டுள்ள மக்கள் மத்தியில் பல பிரச்சினைகள் காணப்படுவதகவும் இவற்றைக் கருத்திற்கொண்டு மேலும் பல விஷேட மத்தியஸ்தர் சபைகளை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற மத்தியஸ்தர் தின வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்தியஸ்தர் சபைகள் தலைவர் ஹெக்டர் எஸ் யாப்பா குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களின் ஆடை, மத்தியஸ்தர் சபை கூடும் நேரம் வழக்குகளை பரிசீலிக்கும் விதம் அவை தொடர்பான அறிக்கை தயாரிக்கும் ஒழுங்குமுறைகள் உட்பட அநேக விடயங்கள் கொண்ட சுற்று நிருபமொன்றை நாடளாவிய ரீதியில் இயங்கும் அனைத்து மத்தியஸ்தர் சபைகளினதும் தவிசாளர்களுக்கு மத்தியஸ்தர் சபைகளின் செயலாளர் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

2 comments:

  1. இவர்கள் என்னதான் ஆலோசனை வழங்கினாலும் ஸ்ரீ.ல.மு.கா. பிரமுகர்கள் சிபார்சு செய்யும் நபர்களுக்கே மத்தியஸ்த சபைத் தலைமைப் பதவிகள் வழங்கப்படும் என பரவலாகப் பேசப்படுகிறது.

    அண்மையில் காத்தான்குடியிலிருந்து நீதியமைச்சர் றவூப் ஹக்கீமைச் சந்தித்த இப்பிரதேசத்தில் அதிகாரமிழந்து அலைக்கழியும், மு.கா. வில் இரண்டாம் முறையாகவும் இணைந்த ஒரு "லெப்பை", புதிய காத்தான்குடியில் அவருடன் நிதி வசூலுக்குச் செல்லும் ஒரு "பாவா ஹாஜி"யாரையே காத்தான்குடிக்கு மத்தியஸ்த சபைத் தலைவராக நியமிக்க வேண்டும் என சிபார்சு செய்த கொடுத்திருப்பதாகவும் நம்பகமான மு.கா. வட்டாரத்திலிருந்தே தகவல் தெரிய வந்துள்ளது.

    மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நேர்முகப் பரீட்சை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்டபோதும் அங்கு கேட்கப்பட்ட கேள்விகள், 'நீங்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவு?', 'கடைசியாக நடைபெற்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள்?', 'ஆளுங்கட்சிய ஏன் வெறுக்கிறீர்கள்..?' எனறவாறான கேள்விகளே கேட்கப்பட்டதாம்.

    நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற வந்த பெண்மணியொருவர் அளித்த பேட்டி பத்திரமாக இருக்கின்றது.

    இப்படி உள்ளக நிலைமைகள் இருக்கம்போது, ஊடகங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள் என்ன பயனைத்தரப் போகின்றது..?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. To the jafna muslim.

    Dear Sir.

    I am Amsar ismail one of the fan and follower (jafnamuslim) kindly requesting you to don't post Raufhakkeem photo with news. not only me. many of my muslims friend dosnt like to see his ugly and unpleasant face pls don't allow him to come kathankudi anymore the land be come dirty dates trees are will die.marhom asraf sir has done lot of good thing for society.but he done one bad thing that give chance to this Rauf hakkim bugger.thank you. we muslims cant except his leader ship.

    ReplyDelete

Powered by Blogger.