புத்தகாயாவில் குண்டுவெடிப்பு - ஜம்இய்யதுல் உலமா மருதமுனை கிளை கண்டனம்
(எஸ்.அஷ்ரப்கான்)
புத்தகாயாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் மனித நேயமுள்ள எவராலும் மன்னிக்க முடியாத பயங்கரவாத நடவடிக்கையாகும். இக்கொடூர செயலை வன்மையாக கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மருதமுனை கிளை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்அமைப்பு சார்பாக அதன் செயலாளர் அஷ்-ஷெய்க் ஏ.ஆர்.எம். சுபைர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த மிலேச்சத்தனமான செயற்பாடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் இன்னும் உலகின் நாலா புறங்களிலும் இடம்பெற்று வருகிறது. இந்த கொடூரங்களை பயங்கரவாத அமைப்புக்கள் நிறுத்த வேண்டும். ஒவ்வொரு மதம் சார்ந்தோரும் அவரவர் மதத்தை பின்பற்றும் சுதந்திரம் இருக்கிறது. ஒருவர் இன்னுமொருவருடைய மத விடயங்கள், நடவடிக்கைகளில் கை வைப்பது மனிநேயமற்ற செயற்பாடாகும். இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
மத அனுஸ்டானங்களில் தலையிடுவது, போற்றிப் புகழக்கூடிய மத நிறுவனங்களின் சின்னங்களில் கை வைப்பதானது இரத்தக் காட்டேறிகள் கூட செய்யாத ஈனச் செயலாகும்.
இந்தியாவின் பீகார் மானிலத்தில் உள்ள புத்தகாயா புனித கோயில் மீது நடத்தப்பட்ட இந்த குண்டுத்தாக்குதல் போன்று இனி ஒருபோதும் உலகின் எப்புறத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் பாதுகாக்ககப்பட வேண்டும். புனிதத் தலங்களான மத வழிபாட்டுத்தலங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த நாட்டின் இறைமை பொருந்திய அரசாங்கத்திற்கு
இருக்கின்றது.
aalim avarhale nalla vesayam.but colombula grandpass la nadantha perachenaikum kandanam therevenga.
ReplyDelete