காதி நீதிபதியாக நியமனம்
இரத்தினபுரி மாவட்டத்தின் காதி நீதிபதியாக எம். இபாம் யெஹ்யா Judicial Service Commission ஆல் 2013 ஆகஸ்ட் மாதம் முதல் நியமனம் பெற்றுள்ளார். மகரகம கபூரியா அரபுக்கல்லூரியில் இஸ்லாமிய கல்வி கற்ற இவர் இரத்தினபுரி சீவலி மத்தியக்கல்லூரியின் பழைய மாணவருமாவார். வர்த்தக முகாமைத்துவத்தில் B.B.A பட்டம் பெற்றுள்ள இவர் 1999ம் வருடத்துக்கான இரத்தினபுரி மாவட்டத்தின் சிறந்த வர்த்தகருக்கான (Best Entrepreneur) விருதைப் பெற்றுள்ளதுடன் இரத்தினபுரி மாவட்ட வர்த்தக சங்கத்தின் பணிப்பாளராக 14 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
சிறந்த சமூக சேவையாளராகவும் இன, மத பேதமின்றி பொது வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவராகவும் இருக்கும் இவர் 'சப்தா' (Safda) என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நிறுவி வட்டியில்லாத கடன் மூலம் சமூகத்துக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றார். பலாங்கொடை 'யுனிவர்சல்' சர்வதேச பாடசாலையின் முகாமையாளராக தற்போது கடமையாற்றி வரும் இவர் அகில இலங்கை சமாதான நீதிவானுமாவார். கடந்த 35 வருடங்கள் காதி நீதிபதியாக இரத்தினபுரி மாவட்டத்தில் கடமையாற்றிய மர்ஹும் அல்லாஹ் எம்.எச்.எம். யெஹ்யா, ஐனுல் பெகளசியா தம்பதிகளின் புதல்வரும் இரத்தினபுரி மாகாணசபை அங்கத்தவரான அல்ஹாஜ் யெஹ்யா எம். இகப்லாரின் சகோதரருமாவார். இவர் மூன்று பிள்ளைகளின் தகப்பனாகவும் நல்ல கணவராகவும் திகழ்ந்து வருகிறார்.
இவரது தந்தைரான மர்ஹும் அல்ஹாஜ் எம்.எச்.எம். யெஹியா அவர்களை நான் நன்கறிவேன். அவர் ஒரு ஆத்மீகப் பக்குவவாதி. அவரது வழியிலேயே அவரது பிள்ளையும் சமூகத்தின் உயர் பதவிக்கு வந்திருப்பது குறித்து அல்ஹம்துலில்லாஹ்!
ReplyDeleteஎல்லாம் வல்ல அழ்ழாஹ், இப்புனித மாதத்தில் இவரது பெற்றோருக்கு அருள் செய்வானாக! இவரும் அழ்ழாஹ்வினால் வழங்கப்பட்ட இச்த சமூக அமானிதத்தை பொறுப்புடன் சிறப்பாக மேற்கொள்வாராக!!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Alhamdulillah....Rathnapura District has found its new Quazi Judge..
ReplyDeleteMay Allah (SWT) guide you in all the Decisions and Actions you take ..Aameen..Let Him shower Health, Wealth, and Strength on you to carry out the future tasks according to the Shari'ah laws..Insha Allah!!
Best Wishes and Dua from the Dearest family of Mr.Ifham Yehiya..
AND specially from his Loving Daughter- F.Ifazah Ifham
Best wishers for new Quasi Judge Mr. Ifam Yehiya sir.
ReplyDeleteI'm strongly believe that the Judicial Service commission has taken correct decision to chose Mr. Ifam Yehiya as Quasi Judge.
I'm personally known he has gain lot experiences and knowledge from the field of Human Resource Development, Psychology and conflict Resolution and Management. So, it will boost to guide him to make correct decisions.
May Allah guide him to make his path all in success.
with kind regards,
MJM. Saneer MA,
Psychologist
Good luck Mr.Ifham Yehiya,
ReplyDeleteIt's a great opportunity to serve the muslim society,i think its a
correct selection for ratnapura district people.
As i know him almost last 20 years he is very much capable to do this job
with the guidance of Quran and sunna.and the reason thoughts of islamic scholers
Mr.Ifham Yehiya i think you may know in our society young age divorce cases
are almost 58%.
I think you have to work not only a Quazi but also a councilor and mediator.
how ever I think you are not a new comer to this you have your father's foot print
and late Al Haj M.H.M Yehiya has created all the working environment
my wishes and dua for you may allah guide you
Munas
Accountant & Auditor