'கிழக்கு மாகாணத்திற்கான எனது விஜயம் கிழக்கு முதலமைச்சரை சுறுசுறுப்பாக்கியது' - ஆஸாத் சாலி
கிழக்கு மாகாணத்தில் வார இறுதியில் நான் மேற்கொண்டிருந்த விஜயத்தையும் மக்கள் சந்திப்புக்களையும் குழப்புவதற்கும் தடுபப்தற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் அவரது அரசு சார்ந்த சகாக்கள் பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர்.அவற்றை எல்லாம் மீறி எனது கிழக்கு மாகாண விஜயம் நான் எதிர்ப்பார்க்காத அளவு வெற்றியையும் திருப்தியையும் அளித்துள்ளது. இந்த விஜயம் கிழக்கு மாகாண அரசியலின் அண்மைக்கால வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விட்டது. இந்த விஜயம் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் சிந்தனையில் பாரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. எனது விஜயத்தின் இந்த அளவு வெற்றிக்கும், அது கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் ஏற்படுத்திய மாற்றத்துக்கும் காரணமாக இருந்த மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் உடப்ட அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓட்டமாவடியிலும், கிண்ணியாவிலும் நான் நடத்திய மக்கள் சந்திப்புக்களை குழப்பி நிறுத்த முதலமைச்சரை அரசு ஏவி விட்டிருந்தது. அவர் தனது சகாக்களை ஏவிவிட்டிருந்தார். இரண்டு இடங்களிலும் அவர்களின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. இவ்விரு இடங்களிலும் மக்கள் அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் என்பனவற்றை எல்லாம் மீறி பெருந்திரளாக வந்து எனது கூட்டங்களில் பங்கேற்றனர். கிழக்கு மாகாண முதலமைச்சாரால் அவரது சொந்த ஊரில் நடந்த கூட்டத்தைக் கூட தனது அதிகார பலம், படைபலம் என்பனவற்றை எல்லாம் இயலுமான வரை பயன்படுத்தியும்யும் கூட தடுக்க முடியாமல் போனது என்பது தான் உண்மை.
கிண்ணியா பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் குவிக்கப்படடு கிட்டத்தட்ட ஒரு யுத்த பிரதேசம் போல் ஆக்கப்பட்டிருந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட அரசாங்கம் வடகக்pலும் கிழக்கிலும் தொடர்ந்து மக்களை யுத்த பீதியிலேயே வைத்திருக்க முயல்கின்றது என்பதை இது மீண்டும் நிரூபிபத்hக அமைந்துவிட்டது.
கிழக்கில் மக்கள் செல்வாக்குமிக்க ஒரு முதலமைச்சர் பதவியில் இருக்கின்றார் என்றால் அரசு ஏன் எனது விஜயத்தை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டும்? அந்த முதலமைச்சர் ஏன் என் வருகையைக் கேள்வியுற்று நீண்ட உறக்கத்தில் இருந்து விடுபட்டு அஞ்சி நடுங்க வேண்டும்?
தனது வாழ்நாளின் மிக நீண்ட பகுதியை உறக்கத்தில் கழித்தவர் இன்னும் கழித்துக் கொண்டிருப்பவர் தான் கிழக்கு மாகாண முதலமைச்சர் என்பதை பெரும்பாலானவர்கள் அறிவார்கள். அவரது பிரதேச மக்கள் அதனை நன்கு அறிவார்கள். ஆனால் கடந்த ஓரிரு தினங்களாக எனது கூட்டங்களை குழப்ப அவர் தனக்கு மிகவும் விருப்பமான உறக்கத்தை கூட தியாகம் செய்து பணியாற்றியதாக நான் கேள்வி பட்டேன். அவரது பிரதேச மக்கள் தான் இதை என்னிடம் கூறினார்கள். என்னுடைய விஜயத்தால் அவர் சுறுசுறுப்பு அடைந்துள்ளமை எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. இது எனக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் ஒவ்வொரு வார இறுதியிலும் நான் கிண்ணியாவுக்கோ அல்லது மட்டக்களப்பிற்கோ விஜயங்களை மேற்கொண்டிருப்பேன். ஒரு முதலமைச்சர் சுறுசுறுப்பாக இருந்தால் அது அந்த மாகாண மக்களுக்கு நல்லதுதானே.
எந்தப் பிரதேச அரசியல்வாதிகளாயினும் சரி மக்கள் தமக்கு வழங்கிய ஆணையையும் அவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் சரியான முறையில் புரிந்து நடந்து கொண்டால் அவர்கள் ஏனைய பிரதேச அரசியல் வாதிகளின் வருகையைக் கண்டு அஞ்சி நடுங்கத் தேவையில்லை. கிழக்கு மாகாண மக்களுள் அநேகமானவர்கள் தற்போது எனக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.நானும் அவர்களுக்காகவும் பொதுவாக இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்துக்காகவும் பணியாற்ற தொடர்ந்தும் உறுதி பூண்டுள்ளேன்.
கிழக்கு மாகான முதலமைச்சரோ... தன்னை எப்போது பதவியிலிருந்து தூக்குவார்கள் என்ற பயத்திலிருக்கும்போதும் இந்த அடாவடியா....?
ReplyDeleteஇங்கெல்லாம் பொருத்தமான அமைப்பாளர்கள் இருந்ததினால் நீங்கள் ஏற்பாடு செய்தபடி செல்லவும் முடிந்தது. கூட்டங்களை நடாத்தவும் முடிந்தது.
ReplyDeleteகாத்தான்குடியில் ஏன் முடியவில்லை என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
காத்தான்குடி அரசியல் நரியை எதிர்க்கக்கூடிய வல்லமையுள்ள ஒருவர்தான் உங்களுடன் கடந்த கிழக்கு மாகாண சபையில் போட்டியிட்ட அல்பா நஸார்.
நீங்கள் அவரை விட்டு விட்டு யாரோ ஒருவரை அமைப்பாளராக வைத்துக் கொண்டு காத்தான்குடியைக் கைவிட்டுள்ளீர்கள். இனியாவது காத்தான்குடிப் பிரதேசத்திலும் பொருத்தமான அமைப்பாளரை நீங்கள் நியமித்து செயற்பட வேண்டும்.
காத்தான்குடியில் நீங்கள் கலாச்சார மண்டபத்தில்தான் பேச வேண்டும் என்றில்லை. அல்பா நஸாரின் ஆற்றங்கரை வளவுக்கு வந்திருந்தாலே போதும்.
பல்லாயிரமாக மக்கள் திரண்டு வந்திருப்பார்கள். படையப்பாவால் மூச்சு விடத்தான் முடிந்திருகக்குமா?
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Br. Azath well done also make a good plan to throw those Shoes lickers of MR and Co in the East.
ReplyDelete