யாழ்ப்பாணத்தில் நாய்களின் தொல்லை - இரவு நேர தொழுகைக்கு செல்பவர்களுக்கு அச்சுறுத்தல்
(பாறூக் சிகான்)
நாய் பிடித்த யாழ் மாநகர சபை முஸ்லீம் சோனகத்தெரு பகுதியில் கட்டாக்காலிகளாக உலாவும் நாய்களை பிடிக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் அரசாங்கம் அமுல்படுத்திய விசர் நாய்பிடித்தல் செயல்திட்டத்தில் சில நாய்களை இப்பகுதியில் பிடித்து ஊடகங்களில் பில்டப் கொடுத்த மாநகர சபை, இன்று நோன்பாளிகளான மக்கள் குறித்த பகுதிகளில் நடமாட விடாமல் தொந்தரவு செய்கிறது எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் நோன்பு கால இரவு நேர தொழுகைக்கு செல்லும் முஸ்லீம் பெண்களை அச்சுறுத்தும் வகையில் துரத்துதல் ,கடித்தல் செயலில் ஈடுபட்டுள்ளது.
ஆனால் இச்செய்தி தொடர்பாக இங்கு உள்ள முஸ்லீம் மாநகர சபை உறுப்பினர்களுக்கு தெரிந்தும் கூட செவிடன் காதில் சங்கு ஊதும் விடயமாக உள்ளதாக மக்கள் கவலைப்படுகின்றனர்
மனிதனுக்கு ஆபத்து விளைவிக்கும் மிருகம்களை கொல்லலாம்,முன்பு ஒருகாலத்தில் இந்த கட்டகால் நாய்கள் எல்லாம் பிடித்து கொண்டு செல்வார்கள் இப்ப அவ்வாறு இல்லை.
ReplyDeleteஇந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கை முளுவதும் நாய்களை ஏவி விட்டுள்ளது . யாள்பானத்தில் தொளுகைக்கு வரக்கூடியவர்களுக்கு விசர் நாய்களின் தொல்லை
ReplyDeleteமகியங்கனையில் தொளவிடாமல் தடுப்பதட்கு பெசர் நாய்களின் தொல்லை.
இப்போது முளு இலங்கையையும் நாய்கள்தானே ஆட்சி புரிகிறது.
الله اكبر