பாராளுமன்றத்தில் ஷரீஆ சட்டம் தொடர்பில்..!
(Tn) வெளிநாடுகளுக்கு தொழில் பெற்றுச் செல்லும் இலங்கைப் பணிப் பெண்களை விபசாரிகளாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலனோம்புகை அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். அரசியல் லாபம் பெறுவதற்காக வெளிநாட்டுக்கு செல்லும் எமது நாட்டுப் பெண்களை ஐ.தே.க. விபசாரிகளாக காண்பிக்க முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வாய்மூல விடைக்காக ரஞ்சன் ராமணாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது; சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் பணிபுரிந்த கொம்பனித்தெருவைச் சேர்ந்த அன்வர் சியானாவினால் 50 இலங்கைப் பணிப்பெண்கள் சிறைவைக்கப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் சவூதி அதிகாரிகளுடன இணைந்து மே 6, 7 ,8 ஆம் திகதிகளில் சுற்றி வளைப்பு தேடுதல் நடத்தியது.
ஆனால் எந்த ஒரு பெண்ணும் அவ்வாறு பிடிபடவில்லை. எமது பணிப்பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படவில்லை. எமது நாட்டு அப்பாவி தாய்மாரையும் சகோதரிகளையும் விபசாரிகள் என்று கூறுவதை ஏற்க முடியாது. சவூதி அரேபியாவுக்கு பணிப் பெண்களை அனுப்புவதை என்னால் 24 மணி நேரத்தில் தடைசெய்து பிரபலமடைய முடியும்.
ஆனால் இந்தப் பிரச்சினைக்கு அது தீர்வாகாது. சவூதிக்கு பணிப்பெண்களை அனுப்புவது ஆகஸ்ட் ஒன்று முதல் தடுக்கப்பட்டுள்ளது. வீட்டு பராமரிப்பு உதவியாளர்களாக பயிற்றப்பட்ட பெண்கள் மட்டுமே இனி அனுப்பப்படுவர். முஸ்லிம் நாடுகளில் அமுல்படுத்தப்படும் ஷரீஆ சட்டத்தை ரஞ்சன் ராமணாயக்க மோசமாக விமர்சித்தார். இதுதான் ஐ.தே.க. வின் நிலைப்பாடு என்பதை முஸ்லிம் நாடுகள் உணர்ந்துகொள்ளும் என்றார்.
‘ஷரீஆ’ சட்டத்தை எவருக்கும் விமர்சிக்க முடியாது எனவும் அது இறைவனின் சட்டம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சவூதி அரேபியாவில் பின்பற்றப்படும் ஷரீஆ சட்டத்தை ஐ.தே.க. எம்.பி. ரஞ்சன் ராமணாயக்க விமர்சித்து கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய அஸ்வர் எம்.பி. ஷரீஆ சட்டத்தை ரஞ்சன் ராமணாயக்க எம்.பி. தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இது முற்றிலும் தவறாகும். சவூதி அரேபியா எமது நட்பு நாடு. ஆனால் இவர் சவூதி அரசையும் விமர்சித்தார்.
உங்களூடைய வேலைகளையும் உங்களது பிரச்சினைகளையும் விட்டு விட்டு மற்றவைகளையெல்லாம் தூக்கி வைத்துக்கொண்டு சண்டைபோட்டுக்கொண்டிருக்கின்றீர்களே இலங்கையிலிருந்து பணிப்பெண்களாகப்போகும் நமது நாட்டுபெண்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் பாதுகாப்பாக நாடு திரும்பவேண்டும். அங்கு அவர்களுக்கு ஏதவது ஒன்று பிரச்சினையென்றால் முதலில் அதற்குரிய ஆதரவுகளை வழங்கவேண்டும் பிற நாடுகளிலுள்ள இலங்கைத்தூதரகங்களைப்போய் நீங்களே நேரடியாக ஒரு சாதரண தொழிலாளியைப்போல பாருங்கள் அவர்கள் எமது நாட்டவர்களுக்கு செய்யும் உதவியின் லட்சணத்தை. முதலில் அதற்கொரு வழி ஏற்பாடு பண்ணிக்கொடுங்கள் அனத்துப்பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் இல்லையேல் நிங்கள் நினைப்பதுபோல இங்கு இருந்து கொண்டு ஒரு புல்லும் புடுங்க முடியாது.
ReplyDeleteசெய்யவேண்டிய வெலைகள் ஒரு புறமிருக்க சரியா சட்டத்தை சும்மா வம்புக்கு இழுக்காமல் முடிந்தால் நல்லதை பின்பற்றுங்கள் சரியா சட்டம் ஒன்றையும் இங்கு மனிதர்களுக்கு மோசமானதை பின்பற்றச்சொல்லவில்லை.