யாழ்ப்பாணத்தில் சிறாஸின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
(பாறூக் சிகான்)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக வட மாகாணசபை தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டுவந்த எம் சிராஸ் நேற்று அக்கட்சியினால் வெளியிடப்பட்ட வேட்பாளர் விபரத்தில் உள்ளடக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை அதில் இணைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி ஏ9 வீதியை வழிமறித்து இன்று காலை 11 மணியளவில் ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
வட மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த எம்.எம்.சீராஸிற்கு வேட்பாளர் பட்டியிலில் உள்ளடக்கப்பட்டாமைக்கு எதிராகவே இந்த போராட்டம் இடம்பெற்றது.இதில் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 'ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே' 'வேண்டும் வேண்டும் எங்கள் அண்ணன் வேண்டும்' 'பனை மரத்தில் வெளவலா எங்களுக்கே சவாலா' 'இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா' போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதோடு கடமையில் இருந்த பொலிஸாரோடு முரண்பட்டதை காணமுடிந்தது.
இறுதியாக கொழும்பிலிருந்தமே ற்படி நிராகரிக்கப்பட்ட எம் சிராஸ் தெரிவித்த கருத்துப்படி தனக்கு மீண்டும் வெளியிடப்பட்ட வேட்பாளர் நியமனத்தில் இடம் வழங்கப்பட்டுள்ளதாக அவரின் அலுவலக இணைப்பாளர் எமக்கு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இந்த நாடகத்தை நினைத்தால் கவலையாக உள்ளது.
ReplyDeleteசோத்துப் பார்சலுக்கும், கூலிக்கும் கூட்டம் சேருவதனை நினைத்தால் சிரிப்பாக உள்ளது. யாழ்ப்பாணத்தை சாராத இவருக்கு டிக்கட் கொடுப்பதால் எந்தப் பலனும் இல்லை.