தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து ஒருதொகை மாணவர்கள் வெளியேற்றம்..!
(Nf) ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 375 பேர் இன்று 08-07-2013 பல்கலைக்கழகத்திலிருந்து காலவரையறையின்றி வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விடுதி வசதிகள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் அறிவுறுத்தல்களுக்கு மாணவர்கள் கட்டடுப்படாமையே இந்த நடவடிக்கைக்கு காரணம் என பல்கலைக்கழகத்திளன் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நண்பகலுக்குள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பீடத்தைத் தவிர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகம் தடை செய்யப்பட்ட பிரதேசமாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment