துருக்கி நாட்டை உளவு பார்க்க இஸ்ரேல் அனுப்பிய பறவை
அண்டை நாடுகளை உளவு பார்க்க ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் துருக்கி நாட்டை உளவு பார்க்க ஒரு சிறிய பறவை அனுப்பப்பட்டது.
அப்பறவை துருக்கி நாட்டின் எலாஷிக் மாகாணத்தின் அல்டினால்யா கிராமத்தில் வித்தியாசமாக பறந்து திரிந்தது. அதைப் பார்த்த மக்கள் கிராம அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர்.
உடனே அவர்கள் அந்த பறவையை பிடித்தனர். அதன் உடலில் ஒரு உலோகத்தினால் ஆன வளையம் பொருத்தப்பட்டிருந்தது. அதில் '24311 டெல் அவி வுனியா இஸ்ரேல்' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
எனவே, துருக்கியை உளவு பார்க்க இஸ்ரேல் இப்பறவையை அனுப்பியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர். ஆகவே, அந்த பறவை தீவிர மருத்துவ சிகிச்சைக்குட்படுத்தப்பட்டது.
அதாவது எக்ஸ்ரே உள்ளிட்டவை எடுத்து பரிசோதிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் பறக்க விடப்பட்டது.
Post a Comment