Header Ads



பஷீர் சேகுதாவூத்தின் அறிக்கை..!

வடமாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதன் மூலம், இன்னுமொரு சிறுபான்மை இனமான தமிழ் மக்களின், பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் உற்பத்தி வள ஊக்குவிப்பு அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்தே போட்டியிட வேண்டும் என தெரிவித்த கருத்துக்கான காரணங்களை விளக்கி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தான் போட்டியிட வேண்டும் என்றும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவியையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு விட்டுத் தருவோம் என்றும் அன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறியிருந்தது போல எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிட வருமாறு எவ்வித பகிரங்கக் கோரிக்கைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இதுவரை விடுக்கவில்லை.

விரைவில் நடைப்பெறவுள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட மாகாணத்தில் அரசுடன் இணைந்தும், ஏனைய இரு மாகாணங்களில் தனித்தும் போட்டியிட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. ஒரு கட்சியில் அங்கத்துவம் பெற்றிருக்கும் சகலரும் எப்போதும் ஒரு விடயத்தில் ஒரே கருத்தைக் கொண்டிருப்பதில்லை.

ஒரு விடயத்தில் பல கருத்துக்கள் கட்சிக்குள் இருப்பது என்பது ஜனநாயகத் தன்மை வாய்ந்தது ஆரேக்கியமானது என்று நோக்கப்படும்; என்று நம்பிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட உறுப்பினர்களில் பலர் மேற்படி எனது கருத்துக்கு சமமான கருத்துடனேயே இருந்தனர். எனினும் இறுதியில் வட மாகாண சபைத் தேர்தலில்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனி த்தே போட்டியிடுவது என்றே முடிவாகியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் என்ற வகையில் இந்த முடிவுக்கு கட்டுப்படும் கடப்பாடு எனக்கு இருப்பதை உணர்ந்து ஏற்றுக்கொண்டவனாக வட மாகாண சபை தேர்தலின் போது அரசுடன் இணைந்தே போட்டியிட வேண்டும் என நான் எண்ணம் கொண்டிருந்தமைக்கான காரணங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன். கட்சியின் பாதுகாப்பு, முன்னேற்றம் கருதிய விடயங்களே காரணங்களாக அமைவதை சகலரும் புரிந்து கொள்வார்கள் என நான் நம்புகின்றேன். 

2 comments:

  1. அப்போ ஏன் சார் நீங்க கிழக்குத் தேர்தலின்போது தலைமைத்துவம் அமைச்சுப் பதவியுடயன் உங்களுக்கு முன்மாதிரியாக வழி காட்டிக் கொண்டிருக்கும்போது நீங்க மாத்திரம் உங்களின் அரை அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிஞ்சீங்க..?

    இந்தத் தேர்தலிலும் அரசாங்கத்தின் வளங்களையும், அமைச்சர் என்ற அதிகாரத்தையும் பயன்படுத்திக் கொண்டு நள்ளிரவு தாண்டியும் பிரச்சாரம் செய்வீர்களா?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. வட மாகாணத்தில் அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம். அப்படி இருக்க முஸ்லிம்களுக்கு அநியாயம் நடப்பதை பார்த்துகொண்டிருக்கும் இந்த அரசாங்கத்துக்கு இன்னும் வெற்றிவாகை சூடவா உதவசொல்றீங்க.அரசாங்கத்துக்கு புத்திபுகட்ட கிடைத்த அறிய சந்தர்ப்பம் இது.நீங்க ரிஷாத் பதயுதீனுடன் இணைந்து கேட்பதற்கு பாடுபட்டிருக்கலாம்.அத விட்டுட்டு இன்னும் அரசாங்கத்துக்கே ஆதரவு தேடுறிங்களே வெட்கமில்லையா?

    ReplyDelete

Powered by Blogger.