கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி சவால் வெற்றிக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி சவால் வெற்றிக் கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. என அழைக்கப்படும் இளந்தாரகை விளையாட்டுக்கழகம் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் வித்தியாசத்தில் வாகரை கிறீன் ஸ்டார் விளையாட்டு கழகத்தை வெற்றி கொண்டு 2013ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி சவால் வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.
இராணுவத்தின் 23வது படைப்பிரிவு மட்டக்களப்பு மாவட்ட உதை பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து நடாத்திய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உதைபந்தாட்ட கழகங்களுக்கிடையிலான உதை பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் 07-07-2013 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இறுதிப் போட்டி ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. எனப்படும் இளந்தாரகை விளையாட்டுக்கழகத்திற்கும் வாகரை கிறீன் ஸ்டார் விளையாட்டு கழகத்திற்குமிடையில் நடைபெற்றது. இதில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. என அழைக்கப்படும் இளந்தாரகை விளையாட்டுக்கழகம் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா ,23வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் அத்துல கொடுப்பிலி, 231வது படைப்பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட இராணுவ இணைப்பதிகாரி பிரிகேடியர் சுதத்த திலகரட்ண, மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா, ஏறாவூர் நகர சபை தலைவர் அலிசாஹீர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன், உதவி அத்தியட்சகர்,முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்தியப் பொறுப்பாளர் ஜுனைட் நளீமி,மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் என்.ரி.பாறூக், செயலாளர் பிரதீபன் உட்பட இராணுவ பொலிஸ் அதிகாரிகள்,பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
congrats yssc
ReplyDelete