முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வடக்கில் மு.கா. ஆளும் கட்சியில் போட்டி..?
வடமாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது. இதுதொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவாரெனவும் அறியவருகிறது.
வடக்கில் அண்மைய காலங்களில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் சில பிரதேச சபைகளின் அதிகாரங்களை முஸ்லிம்கள் இழந்திருந்தனர்.
இந்நிலையில் வடமாகாண சபையில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான தரப்பினரும் இணங்கியிருந்தனர். இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸும் ஆளும் தரப்பில் போட்டியிடுவார்களாயின் அது முஸ்லிம்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமலிருக்க துணை நிற்பதுடன், முஸ்லிம் பிரதிநிதிகளை அதிகளவில் பெறவும் உதவுமென சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
வடக்கு முஸ்லிம்கள் ஏற்கனவே புயங்கரவாதப் புலிகளின் கொடுமைகளை அனுபவித்துள்ள நிலையில் தற்போது தமிழ் இனவாதிகளின் நெருக்குவாரங்களுக்கும் உட்பட்டுள்ளனர். இதனையும் கருத்திற்கொண்டே முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான தீர்மானமொன்றுக்கு வந்துள்ளதாக அறியவருகிறது.
அதேவேளை அமைச்சர் றிசாத் பதியுதீனும், முஸ்லிம் காங்கிரஸ் வடமாகாண சபையில் அளும்கட்சியுடன் இணைந்து கேட்க வேண்டுமென தமது விருப்பத்தை முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.களிடத்தில் வெளிப்படுத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வை.எல்.எஸ். ஹமீட்
எதிர்வரும் வட மாகாண சபைத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து ஐ.ம.சு.மு.வில் போட்டியிட உள்ளதாக அ.இ.ம. காங்கிரஸ் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். வடக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர் முஸ்லிம் காங்கிரஸை அரசுடன் இணைந்து போட்டியிட வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் குறிப்பிட்டார்.
அரசுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலமே கூடுதல் முஸ்லிம் பிரதிநிதிகளை வடமாகாண சபைக்கு தெரிவு செய்ய முடியும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளது. முஸ்லிம் பிரதிநிதித்து வத்தை பாதுகாக்க வேண்டுமானால் மு.கா.வும் அரசுடன் இணைந்து போட்டியிட வேண்டும்.
அமைச்சர் ரிசாத்பதியுதீன் தலைமையில் இது தொடர்பாக மு. காவுடன் பேசி வருகிறோம். வடக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ¤க்கு எத்தனை ஆசனங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து பேசி வருகிறோம் என்றார்.
வை.எல்.எஸ். ஹமீட்
எதிர்வரும் வட மாகாண சபைத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து ஐ.ம.சு.மு.வில் போட்டியிட உள்ளதாக அ.இ.ம. காங்கிரஸ் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். வடக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர் முஸ்லிம் காங்கிரஸை அரசுடன் இணைந்து போட்டியிட வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் குறிப்பிட்டார்.
அரசுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலமே கூடுதல் முஸ்லிம் பிரதிநிதிகளை வடமாகாண சபைக்கு தெரிவு செய்ய முடியும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளது. முஸ்லிம் பிரதிநிதித்து வத்தை பாதுகாக்க வேண்டுமானால் மு.கா.வும் அரசுடன் இணைந்து போட்டியிட வேண்டும்.
அமைச்சர் ரிசாத்பதியுதீன் தலைமையில் இது தொடர்பாக மு. காவுடன் பேசி வருகிறோம். வடக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ¤க்கு எத்தனை ஆசனங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து பேசி வருகிறோம் என்றார்.
if Muslims want to joint with government must agreement
ReplyDelete01,BBS must be band
02 government should stop violence against to the Muslims and stop
destroying the mosques
03 agreement must by mad by high court not by rauf hakkeem because he is busted person cant believe
04 i am writing for all Muslims M P. i am from mannar i know how we was suffer from LTTE. same thing now mahind doing how can we believe
05 pls pls which i wrote very very important matter our M P pls stop political business thing about Islam and yhe society
அனைத்து முஸ்லிம் கட்சிகளும் அரசுடன் இணைந்து தேர்தல் களத்தில் பங்கு பற்றுவதுதான் சாலச்சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில், அப்படியான அதிரடி முடிவினால்தான் தமிழ் கூட்டணி, அசத்சாலி கும்பல் உட்பட அனைவருக்கும் அரசியல் ஆப்பாக இருக்கும். அத்துடன் முஸ்லிம் உறுப்பினர்களையும் அதிகரித்துக்கொள்ள முடியும்.
ReplyDeleteஎது எப்படி இருப்பினும் தமிழ் கூட்டணி ஆட்சிக்கு வருவதென்பது மகிந்தய விடவும் கேவலமாக அமைந்து விடும். அதற்கு யாரும் துணைபோகக்கூடாது....
கிழக்கு மாகாணத்தில் அதிகளவான மாகாண சபை உறுப்பினர்களை பெற்றடுத்தும் எவ்வித பயனும் கிட்டவில்லை.இப்போது வடக்கு மாகாணத்தில் பெற்றுக்கொள்ளப்போகின்றார்களாம் நல்ல வேடிக்கை.
ReplyDeleteதலை என்ன நம்ம தலைவர்ட காதுல உதுராறு ? யாருக்காவது சொல்ல முடியுமா ?
ReplyDelete"டோ தம்பியோ...... கட வககன நிகங்க் ஹிடபல்லா "
சரிதானே ?
தலைவர் அவர்களே நமது பிரநிதித்துவம் முக்கியம் என்பதற்காக புலி வாலை பிடிக்கலாமா?
ReplyDeleteவட மகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளை ஆளுந்தரப்பில் அதிகமாகப் பெறுவதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு இதுகால வரையிலும் கிடைக்காத நன்மைகள் இனிமேல் என்னதான் கிடைக்கப்போகிறது?
ReplyDeleteமுஸ்லிம் சமூகம் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இப்போது அரசாங்கத்தின் அமைச்சரவையிலும், நடாளுமன்றத்திலும் இருக்கின்ற அமைச்சர்களினதும், பிரதியமைச்சர்களினதும், உறுப்பினர்களினதும் பலங்கள் போதாதா?
இவர்கள் அத்தனை பேரும் அரசாங்கத் தரப்பில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில்தானே முழு நாட்டிலும் முஸ்லிம்களுக்கு எதிரான இத்தனை அநியாயங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
கேவலம், ஊவா மாகாண அமைச்சர் ஒருவரால் பூட்டுப் போட்டு மூடப்பட்ட மஹியங்கனைப் பள்ளிவாசலை ஒரு வார காலமாகியும் திறக்க வக்கற்ற நிலையிலிருக்கும் இத்தனை முஸ்லிம் அமைச்சர்களுடனும், பிரதியமைச்சர்களுடனும், உறுப்பினர்களுடனும், நாடெங்கும் அரசுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கின்ற மாகாண முஸ்லிம் அமைச்சர்கள், உறுப்பினர்களுடனும், உள்ளுராட்சி மன்றங்களின் முஸ்லிம் தவிசாளர்கள், பிரதித் தவிசானர்கள், உறுப்பினர்களுடனும் வடக்கிலிருந்தும் அரசு தரப்பில் தெரிவு செய்யப்படவுள்ள முஸ்லிம் உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டு ஊடகங்களில் அறிக்கைக் காவடி எடுப்பதற்கா இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்?
வேறொன்றுமில்லை. தற்போது அரசாங்கத்தரப்பில் இருந்து கெடு இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு இத்தனை அநீதிகளும் நடைபெறுவதற்கு காரணியாக இருக்கின்ற முப்பெரும் முஸ்லிம் தலைமைத்துவங்களின் முகமூடிகள் இந்த வடக்குத் தேர்தலுடன் கிழியப்போகின்றன என்கிற அச்சம்தான், இத்தனை காலமாக ஒன்றுபடாமல் எதிரும் புதிருமாக நின்று முஸ்லிம் களின் வாக்குப் பலத்தை வீணடித்தும், விற்றுப் பிழைத்தும் வந்த இத்தலைவர்களைக் கிருமி கலங்கச் செய்திருக்கின்றது.
இவர்களின் கச்சவட அறிக்கையெல்லாம் வாக்குப் பெட்டிகள் தூக்கும் வரைக்கும்தான். அப்புறம் "பழைய குருடி கதவைத் திறவடி" என்ற நிலைதான்.
செத்துப்போன புலிகளின் இத்துப்போன அட்டகாசத்தையே இன்னமும் சொல்லிச் சொல்லி முஸ்லிம் சமூகத்தை உசுப்பேத்தி அரசியல் பிழைப்பு நடாத்தி வரும் இவர்களுக்கு வடபுல முஸ்லிம்கள் சரியான படிப்பினையூட்டுவார்கள் என்றே எதிர்பார்க்கின்றேன்
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Ethu tharintha vidayam thana
ReplyDelete3 Provincial Council Election Muslim Samukam,
ReplyDeleteSariyan Padam Pokaddavandum
=============Kalmunai Mohamed Fowse+++++++++++++++