Header Ads



'எகிப்தியர்கள் படுகொலை செய்யப்படும்போது அமைதியாக இருக்கிறார்கள்'

எகிப்து  படுகொலை சம்பவங்கள் குறித்த கண்டனம் வெளியிடாததற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகள் மீது துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்டொகன் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

“எகிப்து மக்கள் படுகொலை செய்யப்படும் போது அவர்கள் தொடர்ந்தும் அமைதியாக இருக்கிறார்க்ள. உலகெங்கும் சுற்றி ஜனநாயகம் கற்பிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஐரோப்பிய பெறுமானங்களுக்கும் என்ன ஆனாது?” ஸ்தன்பூலில் வர்த்தகர் குழுவொன் றுடனான சந்திப்பின் போதே எர்டொகன் இந்த கருத்தை வெளியிட்டார். ஐக்கிய நாடுகள் சபை எங்கே? துருக்கி பொலிஸார் அதிகாரபூர்வமாக கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்ட போது கூச்சலிட்டவர்கள் எகிப்தில் சதிப்புரட்சி மற்றும் படுகொலை சம்பவங்கள் இடம்பெறும் போது எங்கே போனார்கள் என்றும் எர்டொகன் சாடினார். tn

1 comment:

Powered by Blogger.