காத்தான்குடி மீரா பாலிகா மகளீர் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்பட்ட பஸ் வண்டி பயன்படுதபடாமல் உள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் இதகுறித்து அவதானம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் வண்டி குறித்து உள்ளுர் அச்சு ஊடகம் பல வருடங்களுக்கு முன்னர் இருந்தே பல தடவைகள் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அது குறித்து இப்பிரதேசத்திலுள்ள எவரும் அக்கறை செலுத்தவில்லை.
குறிப்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி எஸ்எம். சுபைர், மட்டக்களப்பு மத்தி வலய கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனாப். அகமட்லெப்பை, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கல்வி அபிவிருத்திக்குழு போன்ற எவரும் இதில் அக்கறை காட்டவில்லை.
சுனாமியின் பின்னர் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று இந்த குளிரூட்டப்பட்ட பஸ் வண்டியை இவ்வித்தியாலயத்திற்கு நன்கொடையயாக வழங்கியிருந்தது.
இது சும்மா கிடைத்த பஸ் என்பதாலோ என்னவோ இந்த பஸ்ஸை பாடசாலை வளவில் நடு மத்தியில் நிறுத்தி வைத்து அதைச் சுற்றிலுமாக கட்டிடங்கள் பலவற்றையும் கட்டிவிட்டார்கள்.
இப்போது இந்த பஸ்ஸை வெளியில் எடுப்பதற்கே பல்லாயிரம் ரூபாய்களைச் செலவழித்து பாரிய கிரேன் இயந்திரங்களைக் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறுதான் எமதூரில் நிர்வாகங்கள் பலவும் நன்கொடையாகக் கிடைக்கப் பெற்ற சொத்துக்கள், வளங்கள் போன்றவற்றை பொறுப்பற்ற வகையில் பராமரிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளன.
Just wasting public money.
ReplyDeleteஇந்த பஸ் வண்டி குறித்து உள்ளுர் அச்சு ஊடகம் பல வருடங்களுக்கு முன்னர் இருந்தே பல தடவைகள் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அது குறித்து இப்பிரதேசத்திலுள்ள எவரும் அக்கறை செலுத்தவில்லை.
ReplyDeleteகுறிப்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி எஸ்எம். சுபைர், மட்டக்களப்பு மத்தி வலய கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனாப். அகமட்லெப்பை, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கல்வி அபிவிருத்திக்குழு போன்ற எவரும் இதில் அக்கறை காட்டவில்லை.
சுனாமியின் பின்னர் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று இந்த குளிரூட்டப்பட்ட பஸ் வண்டியை இவ்வித்தியாலயத்திற்கு நன்கொடையயாக வழங்கியிருந்தது.
இது சும்மா கிடைத்த பஸ் என்பதாலோ என்னவோ இந்த பஸ்ஸை பாடசாலை வளவில் நடு மத்தியில் நிறுத்தி வைத்து அதைச் சுற்றிலுமாக கட்டிடங்கள் பலவற்றையும் கட்டிவிட்டார்கள்.
இப்போது இந்த பஸ்ஸை வெளியில் எடுப்பதற்கே பல்லாயிரம் ரூபாய்களைச் செலவழித்து பாரிய கிரேன் இயந்திரங்களைக் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறுதான் எமதூரில் நிர்வாகங்கள் பலவும் நன்கொடையாகக் கிடைக்கப் பெற்ற சொத்துக்கள், வளங்கள் போன்றவற்றை பொறுப்பற்ற வகையில் பராமரிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளன.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-