நிலாவெளி வேலூரில் வெடிபொருட்களுடன் மூவர் கைது (படங்கள்)
(ஏ.ஜே.எம்.சாலி)
திருகோணமலை நிலாவெளி பிரதேச வேலூரில் வெடிபொருட்கள் தொகுதியுடன் மூவர் உப்புவெளி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று 29-07-2013 மேற்படி சம்பவம் நடைபெற்றுள்ளது. அனுராதபுரத்திலிருந்து நிலாவெளி பகுதிக்கு வந்த முச்சக்கர வண்டியை பரிசோதித்த போதே பின்வரும் 200 டைனமைட் குச்சிகள் 6.5 மீற்றர் நீள வெடி நூல் ஆகிய பொருட்கள் கைப்பற்றப்பட்டன .நிலாவெளி பிரதேசத்தை சேர்ந்த மூவரே இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.தகவல் அறிந்த உப்புவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.கே.ஏ.சவாகிர் தலைமையில் பொலிஸ் அத்தியட்சகர் பந்துல குனவர்தன அவர்களின் வழிகாட்டலில் மேற்படி வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment