மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் ரவுடித்தனம்
(Gtn) தேசிய சாமாதானப் பேரவையினால் மட்டக்களப்பு விடுதி ஒன்றில் இன்று (27.07.13) ஏற்பாடு செய்யப்பட்ட காணி நடைமுறைகள் தொடர்பான கருத்தரங்கில் மட்டக்களப்பு மங்கராமய விகாரதிபதி குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.
இக் கருத்தரங்கிற்குள் பிரவேசித்த மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர்இ இந்த கருத்தரங்கு தவறான முறையில் நடைபெறுவதாகக் கூறி குழப்பத்தில் ஈடுபட்டார்.
கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் காணி பிரச்சினை மற்றும் அவற்றுக்கான தீர்வு தொடர்பிலான பரிந்துரைகள் குறித்து தெளிவுப்படுத்துவதற்கான செயலமர்வொன்று நடத்தப்பட்டது.
தேசிய சமாதான பேரவையினாலேயே இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மூவினங்களையும் சேர்ந்தவர்கள்இ சிவில் சமூகத்தினர்இ மீள்குடியேறிய பகுதியிலுள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் பல்கலைகழக விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
திடீரென அந்த செயலமர்விற்குள்நுளைந்த மட்டக்களப்பு மங்களாராம விஹாராதிபதி அம்பிட்டிய சமரத்ன தேரர் தானும் இந்த செயலமர்வில் உரையாற்றவேண்டுமென கேட்டுள்ளார்.
அவருக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் அந்த செயலமர்வில் உரையாற்றுவதற்கு ஏற்பாட்டாளர்கள் இடமளித்துள்ளனர்.
அவரது உரை செயலமர்வின் தொனிப்பொருளுக்கு அப்பால் சென்று கொண்டிருக்கின்றமை குறித்து ஏற்பாட்டாளர்கள் விஹாராதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதே அவர் ஏற்பாட்டார்களை தாக்கியதாகவும் இதனையடுத்தே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார்இ இருதரப்பினரிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பைத்தியங்கள் பலவிதம் அதில் இது காவியுடுத்த பயங்கரவாத பைத்தியம். பேசாம தூக்கி கடல்ல போட்டுட்டு வேலையபாருங்கப்பா இவங்களுக்கு இப்படிச்செய்தால்தால் பயம் வரும்.
ReplyDeleteகூட்டத்திற்கு அழைப்பு விடுக்காதவரை கருத்துரை வழங்க அனுமதித்தது ஏற்பாட்டாளர்களின் தவறு.
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
first of all,send them to a mondisory
ReplyDeleteThis monk tell lie, very bad man in Batticaloa. lier
ReplyDelete