உலமாக்களுக்கான ஹதீஸ் கலை ஆய்வு சம்பந்தமான செயலமர்வு
(மூதூர் முறாசில்)
அஷ்ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில் மூதூர் அந்-நஹ்ழா இஸ்லாமிய சமூக ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலமாக்களுக்கான ஹதீஸ் கலை ஆய்வு சம்பந்தமான செயலமர்வு இன்று மூதூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்-நஹ்ழா இஸ்லாமிய சமூக ஒன்றியத்தின் தலைவர் அஷ்ஷெஹ்ய்க் எம்.எஸ்.எம். சலீத் நத்வி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அஷ்ஷய்க் பி.பி. ஜாபிர் சரபி வளவாளராக கலந்து கொண்டு 'மக்தபா ஷமிலா' கணனி மென்பொருள் ஊடாக ஹதீஸ் கலை ஆய்வை மேற் கொள்வது சம்பந்தமாக முதலாவது விரிவுரையை வழங்கினார்.மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இச்செயலமர்வில் ஹதீஸ் கலையில் ஆர்வமுள்ள உலமாக்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
Post a Comment