தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் போராட்டம் குறித்து துணைவேந்தரின் விளக்கம்
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று திங்கட்கிழமை போராட்டமொன்றை நடாத்தியிருந்தனர். இதுகுறித்து தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் Dr .SMM இஸ்மாயில் அவர்களை நேரில் சந்தித்த பொழுது அவர், குறிப்பிட்ட மாணவர்களுக்கு ஏன் தடையுத்தரவு வழங்கப்பட்டது என்று விளக்கம் தருகையில்,
"இப்பல்கலைக்கழகத்தில் 1,2,3,இறுதியாண்டு மாணவர்கள் உட்பட 1809 மாணவர்களுக்கான விடுதி வசதி தேவையாக உள்ளது.ஆனால் பலகலைக்களகத்தினுள் சகல வசதிகளையும் கொண்ட விடுதி வசதி 700 பேருக்கு மட்டுமே தற்பொழுது உள்ளது. இது தவிர விடுதி வசதியின்மையால் மாணவர் எதிர்நோக்குகின்ற இன்னோரன்ன பிரச்சனைகளை மனதிற்கொண்டு நானும் எனது நிருவாகத்தினரும் குறிப்பாக மாணவர்களிற்கான உதவியும்,நலன்புரிக்குமான அமைப்பும் கடந்த 2 மாதங்களாக இராப்பகலாக கஷ்டப்பட்டு வளாகத்தினுள் பிரத்தியேக தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த பெண்களுக்கான தொழுகை அறை (ladies Prayer Room)சிரேஸ்ட விரிவுரையாளர்களுக்கான ஒய்வு மண்டபம்(சீனியர் lecturers common room ),முன்னை நாள் சுகாதார கிளினிக் இருந்த இடம்(old Health center),போலீசாருக்கென வழங்கப்பட்டிருந்த தங்குமிடம்,பலநோக்கு கடை இருந்த இடம் (Multishop),விடுதிகளில் சிற்றுண்டிச்சாலைகளாக உபயோகிக்கப்பட்ட இடங்கள், களஞ்சிய அறைகள் போன்றவற்றை மாணவர்கள் தங்கி நின்று படிக்கக் கூடிய தற்காலிக விடுதிகளாக மாற்றியமைத்துள்ளோம் ஆனால் கொஞ்சம் அப்படி இப்படி என்று விட்டுக்கொடுப்புகளுக்கு மத்தியில் 860 மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இருந்திட்டபோதிலும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட விடுதி நிரந்தர விடுதிகள் போன்ற வசதிகள் கிடையாது,அதனை எதிர்பார்க்கவும் முடியாது ஏனெனில் தற்காலிகமான அமைப்புக்கு நிரந்தர கட்டிடங்களுக்கு செய்யும் கட்டமைப்புகளை செய்ய முடியாது என்பது யாவரும் நன்கறிந்ததே!இங்கு குளியலறை மலசல கூடம் போன்றவற்றில் மாணவர்கள் சற்று விட்டுக்கொடுப்பு மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.ஏனெனில் 3 பேர் இருக்கும் அறைகளில் 5 பேர் இருக்கின்றனர்,
இது தவிர 5 கிலோமீட்டர் தொலைவில் நிந்தவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள MPCS கட்டிடத்தை வாடகைக்கு அமர்த்தி அங்கு 120 ஆண் மாணவர்களை தங்க வைத்துள்ளோம்.,இது தவிர ஒலுவில் துறைமுக கட்டிடம் ஒன்றும் உள்வாங்கப்பட்டுள்ளது இது போல மாணவர்களது நலனில் நிருவாகம் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டிருக்கும் போது வெளியிலுள்ள 120 ஆண் மாணவர்களயும் வளாகத்தினுள் உள்வாங்குமாறு வேண்டி 2ஆம் வருட மாணவர்கள் நிருவாகத்திற்கு முட்டுக்கட்டை போடுவதுடன்,பெண்கள் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை ஏனைய மாணவிகளுடன் சென்று தங்குமாறு பலவந்தமாக சில மாணவர்களின் தலைமையின் கீழ் குறித்த மாணவர்கள் மாணவியரை பலவந்தப்படுத்தியுள்ளனர்.இதனால் சுமூகமாக இருந்த வளாகத்தினுள் பாதுகாப்பு நிலை கேள்விக்குறியாகிவிட்டது.
நெருக்கமான அறைகளினுள் எவ்வாறு அளவிற்கதிகமான மாணவர்களை தங்கவைக்க முடியும்?அவ்வாறு தங்க வைப்பது அவர்களது சுகாதாரத்திற்கும் கேடல்லவா? இருக்கின்ற உட்கட்டமைப்பு வசதிகள் தாக்குப்பிடிக்காமல் இருக்கின்ற போது இன்னும் அதிக மாணவர்களை தங்க வைத்தால் இருக்கின்ற வசதிகள் முற்றாக சேதமாகி அடிப்படையே ஆட்டம் கண்டுவிடும் அபாயம் இருக்கின்றது.
எந்தவொரு பல்கலைக்கழகமும் 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கு சட்டறேதியாக விடுதி வசதி செய்து கொடுப்பதில்லைஎன்னில் சமூகமயமாகும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் வெளியிடங்களில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இப்பல்களைகலகத்திர்க்கு இன்னும் 512 ஆண் மனவர்களுக்கானதும் 398 மானவியர்களுக்குமான விடுதி வசதி தேவையாக உள்ளது..
சில தீய சக்திகளின் தலைமையின் கீழ் இயங்கும் குறித்த மாணவர்களது செயல்பாடானது மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்கு இடையூறாக இருப்பதுடன் தேசிய ரீதியிலும்,சர்வதேச ரேதியிலும் இப்பல்கலைகழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முனைகின்றனர்,இதனிடையே அநேகமான மாணவர்கள் குழப்பக்கார மாணவர்களது அணியில் நாங்கள் இல்லை எங்களது கல்வி நடவடிக்கைகளை தொடர நடவடிக்கை எடுங்கள் என்று எனக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனவும் கூறினார்.
சந்திப்பின் போது மாணவர்களது நலன்புரி அமைப்பு பணிப்பாளர் AMM சமீம் தகவல்களை வழங்கினார் புதிதாக அமைக்கப்பட்ட விடுதிகளுக்கும் அழைத்துச்சென்று வசதிகளை நேரில் பாருங்கள் என்று காட்டினர்
Everything is free, first of all , free education to be limited to ALs.
ReplyDeleteFree education is only in distributing books and uniforms.. students are depending on private tuition by the Govt.paid teachers, inefficiency of higher education ministry is the root cause of the problem.
ReplyDeletenormally hostel is provided for first and final year students only
ReplyDelete