Header Ads



எகிப்தில் பதற்றம் - உள்நாட்டு யுத்த வெடிக்குமென இஹ்வான்கள் எச்சரிக்கை


பதவி கவிழ்க்கப்பட்ட முர்சியின் சட்டபூர்வ அதிகாரத்திற்காக போராட்டம் நடத்தும் முர்சி ஆதரவு தேசிய கூட்டணி இன்று வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி உட்பட 11 அரசியல் கட்சிகளைக் கொண்ட இந்த கூட்டணியின் அழைப்பில், கெய்ரோ பேரணியில் ஒன்றுதிரளுமாறு ஆதரவாளர்களை கோரியுள்ளது. எனினும் இன்றைய முர்சி ஆதரவு பேரணியின் மீது இராணுவத் தலைமைகள் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது-

‘இராணுவத் தலைமையினால் முன்னெடுக்கப்பட்ட சதிப்புரட்சியை சர்வதேச சமூகம், ஐ. நா. மற்றும் மனித உரிமை அமைப்புகள் நிராகரிக்க வேண்டும். இது பிராந்தியத்தில் பதற்றத்தையே ஏற்படுத்தும்’ என்று முர்சி ஆதரவு கூட்டணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதியின் அழைப்பு குறித்து சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் தலைவரில் ஒருவரும் முர்சி அரசில் அமைச்சராக இருந்தவருமான அம்ர் டர்ரக் வேல்ட் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ‘சிசி தனது தோல்வியை தவிர்க்க ஏனைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் தனது கடைசி முயற்சியை கையாண்டிருக்கிறார். அது நாட்டை சிவில் யுத்தத்திற்குத்தான் இட்டுச் செல்லும். இது மிக அபாயகரமானது’ என எச்சரித்தார்.

இராணுவத் தளபதியின் ஆர்ப்பாட்ட அழைப்பை எகிப்தின் பிரதான அரசியல் குழுக்களான சலபிக்களின் நூர் கட்சி மற்றும் ஏப்ரல் 6 புரட்சியின் இளைஞர் முன்னணி ஆகியன நிராகரித்துள்ளன.

‘அணி திரள்வுக்கு எதிராக அணி திரள்வது சிவில் யுத்தத்திற்கே வழிவகுக்கும்’ என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கூட்டணியில் இருந்து பின் இராணுவ சதிப் புரட்சிக்கு ஆதரவளித்த அல் நூர் கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ‘ஒரு அரசு சட்டத்தை மீறினால் அது தன்னைத் தானே அழித்துக்கொள்ளும்’ என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏப்ரல் 6 இளைஞர் முன்னணியும் இதேபோன்ற அறிக்கையை வெளியிட் டுள்ளது. ‘பாதுகாப்பு மற்றும் வன்முறையை தடுக்கும் தனது பணியை நிறைவேற்ற மக்கள் ஆதரவு செயற்பாடு தேவையில்லை. இந்த தற்போதைய பதற்றத்தை மேலும் மோசமாக்கி நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்புக்கே பாதகமாக அமையும்’ என அந்த முன்னணி எச்சரித்துள்ளது. இராணுவ தளபதியின் அழைப்பு குறித்து தாம் கடும் அவதானத்துடன் இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ‘இந்த அழைப்பு மேலும் வன்முறையை அதிகரிக்க சாத்தியப்பாடுகள் இருப்பது குறித்து நாம் அவதானமாக இருக்கிறோம்’ என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜேன் ப்சஜி குறிப்பிட்டார்.

எனினும் இராணுவத்திற்கு ஆதரவான இன்றைய ஆர்ப்பாட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப எகிப்தின் பல தனியார் தொலைக்காட்சிகளும் முன்வந்துள்ளன. 10 தனியார் தொலைக்காட்சிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் வழமையான ரமழான் நிகழ்ச்சிகளை நிறுத்தி இந்த பேரணியை நேரடியாக ஒளிபரப்பப் போவதாக கூறியுள்ளன.

எகிப்தின் பெரும் பாலான தனியார் தொலைக்காட்சிகள் இராணுவ சதிப்புரட்சிக்கு ஆதரவாகவும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எதிராகவும் பக்கச் சார்பாக செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் அதனது தற்போதைய செயற்பாடு இந்த தொலைக்காட்சிகளை மேலும் தனிமைப்படுத்திவிடும் என கெய்ரோ விலிருக்கும் அல் ஜkரா செய்தியாளர் கூறியுள்ளார்.

இதனிடையே எகிப்து இராணுவம் தேசிய எச்சரிக்கை காலத்தை பிரகடனப் படுத்தியுள்ளது. அதற்கு வீதிகளில் மேலதிக படைகளை குவிக்க அனுமதி அளித்துள்ளது. 

ஏற்கனவே கடந்த ஜூலை 3 ஆம் திகதி ஜனநாயக முறையில் தேர்வான ஜனாதிபதி முர்சி பதவி கவிழ்க்கப் பட்டதைத் தொடர்ந்து இதுவரை இடம்பெற்ற வன்முறைகளில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tn

3 comments:

  1. அந்நூர் கட்சி இக்வான்களின் கூட்டணியில் இருந்து பிரிந்த்தது என்பது பிழையான கருத்து .

    இக்வான்களை எந்தற்காக ஆதரிக்கவிலையோ அதே காரனத்திட்காகவே தற்போதைய அரசையையும் அன்னூர் கட்சி ஆதரிக்கவில்லை எந்த ஒரு பக்க சார்பும் இன்றி நாட்டின் நலன் கருதி தனது கொள்கையில் மிகதெளிவகா இருக்கிறது அந்நூர் கட்சி.

    இந்த நிலை வராமலிருக்க இக்வானிய அரசுக்கு தன்னாலான அனைத்து முயற்சியையும் இந்த கட்சி மேற்கொண்டது .

    ஆனால் இக்வனிய அரசு எகிப்தின் களநிகழ்வை சாதரணமாக கருதியதே இவ்வளவுக்கும் காரணம் .

    இந்த போர் சூழலில் இருந்து எகிப்தை காப்பாற்றுமாறு எல்லோரும் இணைவனை பிராத்திப்போம் .






    ReplyDelete
  2. Ithu Eppadi Irukkunna Kuliyila Thallivittuttu Veliya vara Kay kodukkura Mathari {PACHCHA MUNAFEEK THANAM } Ean Ulla irunthe Thiruththa Mudiyatha? Avarkalum Islam Therinthavarkalthane.

    ReplyDelete
  3. U S A saying we are allways monitoring egypt
    but all the problem planed by usa now egypt military also cheated by usa

    ReplyDelete

Powered by Blogger.