Header Ads



கென்யாவில் தங்கம் அகழ்ந்த இலங்கையர்கள் கைது

அனுமதியற்ற வகையில் கென்யாவில் சுரங்க அகழ்வில் ஈடுபட்ட இரண்டு இலங்கையர்கள் கென்ய காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கென்யாவின் இறைவரி அதிகார சபையின் அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். 

கென்யாவின் டய்டா டவேடா கவுன்டி என்ற நகரில் உள்ள தங்க சுரங்கம் ஒன்றில் பணியாற்றி வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் இருவரும் மேலும் சில வெளிநாட்டவர்களுடன் இணைந்து, கென்யாவின் சட்டத்திட்டங்களை புறக்கணித்துவிட்ட சட்ட விரோதமான முறையில் தங்கம் மற்றும் இரத்தினக்கற்களை அகழ்ந்து விற்பனை செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை கடந்த வருடமும் இதேபோன்று இரண்டு இலங்கையர்கள் சட்ட விரோதமான முறையில் இரத்தினக்கற்களை கொள்வனவு செய்ய முற்பட்ட போது கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Sfm

No comments

Powered by Blogger.