Header Ads



பள்ளிவாசலைத் திறந்துவிடு..!


மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் (நான் எனும் நீயிலிருந்து)

பள்ளிவாசலைத் திறந்துவிடு
பக்தன் வந்து நிற்கின்றேன் !
உள்ளே இருக்கும் மின்குமிழை
உடனே இயக்கி ஒளிப்பாய்ச்சு !

வெள்ளைச் சீலையை வீசியெறி
வெற்றுத் தரையில் வணங்கவிடு !
நள்ளிரவில் வந்ததனால்
முடியாதென்று சொல்லாதே !

தொழுகைக்கான அழைப்பின்றி
வந்தால் கதவைத் திறவாயோ !
அவனை வணங்க வேளையுமோ
ஆசையுடனே வந்துள்ளேன்
பள்ளிவாசலைத் திறந்துவிடு
பக்தன் வந்து நிற்கின்றேன் !

பள்ளி திறந்து இருக்கையிலே
பாவம் செய்து திரிந்தாலும்
தொழுவதற்காய் வந்தவனை
துரத்தலும் பாவம் அறிவாயோ !

பாவம் புண்ணியம் என்றெல்லாம்
பேரிதாய் உலகம் பேசினாலும்
மன்னிப்பளிக்கக் காத்துள்ளான்
மறுக்கா கதவைத் திறவாயோ !

எந்த நேரமும் வருவேன் நான்
எழிலாய் இதனை வைத்திடுவாய்
பள்ளிவாசலைத் திறந்துவிடு
பக்தன் வந்து நிற்கின்றேன் !

No comments

Powered by Blogger.