Header Ads



கைதட்டுதல் ஒரு தொற்று நோய் - ஆராய்ச்சியாளர்கள் தகவல்

கைதட்டுதல் என்பது ஒரு தொற்று நோயை போன்றது; சமூக நிர்பந்தம் காரணமாகவே பலரும் கைதட்டுகிறார்கள்' என, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஸ்வீடன் ஆராய்ச்சியாளர் ரிச்சர்டு மான் கூறியதாவது,

 கூட்டத்தில் உள்ளவர்களின் மனோநிலைக்கு ஏற்பவே கைதட்டல்கள் அமைகின்றன. யாரேனும் ஒருவர் அல்லது இருவர் கைதட்ட துவங்கினால், அது மற்றவர்களுக்கும் பரவி, அவர்களும் சேர்ந்து கைதட்ட துவங்குகின்றனர். இது, சங்கிலித் தொடர்போல் தொடர்கிறது. நம் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பதைவிட, கைதட்டல்களே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இருப்பினும், கைதட்டுதலை பெறுபவர் யாராக இருந்தாலும், எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், கைதட்டுதலுக்கு முன், அவையெல்லாம் ஒன்றுமில்லாமல் போய் விடுகின்றன. அதாவது, பாராட்டுதலை விட, கைதட்டுதலே முக்கியத்துவம் பெறுகிறது. சில நேரங்களில், ஒரு நபருக்கு பத்து மடங்கு கூடுதலாக, பார்வையாளர்கள் கைதட்டி பாராட்டு தெரிவிக்கலாம். அதே நேரத்தில், மற்ற சிலருக்கு மூன்று மடங்கு அதிகமாக பாராட்டலாம். சமூக நிர்பந்தம் காரணமாக, ஒருவர் கைதட்டுதலை துவங்கினால், அதே நிர்பந்தம் காரணமாக யாரேனும் நிறுத்தினால், கைதட்டுதல் என்பது தானாகவே நின்று விடுகிறது. இதன் மூலம், கை தட்டுதல் என்பது ஒரு தொற்று நோய் போன்றது என்பது தெளிவாகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

1 comment:

  1. எதை எதை ஆராய்ச்சி பண்ணனும்டு வெவெஸ்தயே இல்லாமல் போச்சே....

    ReplyDelete

Powered by Blogger.