Header Ads



அமைச்சர் ஜீவன் குமரதுங்க மீது தண்ணீர் போத்தல் தாக்குதல்

மொறட்டுவை, ராவத்தாவத்தை பகுதியில் இன்று புதன்கிழமை தளபாடத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

ஆர்ப்பாட்ட இடத்திற்கு அமைச்சர் ஜீவன் குமரதுங்க சென்றபோது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர் மீது தண்ணீர்போத்தல்களால் வீசிய நிலையிலேயே அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக ராவத்தாவத்தை மற்றும் மொறட்டுவைப் பகுதிகளின் காலி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

1,000 இற்கும் அதிகமான தளபாடத் தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். தங்களது தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த குறைநிறைகளை அதிகாரிகள் நிவர்த்தி செய்ய வேண்டும் எனக்   கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். TM

No comments

Powered by Blogger.