'அரசின் பங்காளி என்பதற்காக எல்லா விடயங்களுக்கும் ஆதரவு வழங்க வேண்டும் என்பதற்கில்லை'
(ஏ.எல்.ஜனூவர்)
மாகாண சபை முறைமையை ஒழிக்கும் எந்தவொரு திருத்தச் சட்ட மூலத்திற்கும் தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்பாசன அமைச்சரும் கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியத்தின் பேச்சாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
13ஆவது திருத்தச் சட்ட மூலத்தை எதிர்த்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவருமான ஏ.எம். ஜெமீலினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரனை தொடர்பில் அமைச்சரது கருத்தினைக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மாகாண சபை ஆட்சி முறையில் வலுவிறக்கம் செய்யப்படவோ அல்லது, மாகாண சபை முறைமையை ஒழிக்கவோ தாம் ஒரு போதும் ஆதரவு வழங்கப் போவதில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகும் நாம் ஒரு போதும் இணக்கம் தெரிவிக்கப் போவதில்லை. தாம் ஆரசாங்கத்தின் பங்காளி கட்சி என்பதற்காக அரசாங்கம் கொண்டுவரும் எல்லா விடயங்களுக்கும் ஆதர வழங்க வேண்டும் என்பதற்கில்லை.
இதற்கு நல்ல உதாரணமாக கடந்த கிழக்கு மாகாண சபை ஆட்சிக் காலத்தின் போது அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட நாடு நகர சட்;ட மூலத்திற்கு தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தமையினை இங்கு நினைவு படுத்த விரும்புகின்றேன்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக கொண்டு வரப்பட்ட மாகாண சபை ஆட்சி முறைமை இன்னும் இந்த மாகாணங்களில் முறையாக அமுல் படுத்தப்படாத நிலையிலையே இருந்து வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் அதனை குறைப்பதற்கும், இல்லாமல் செய்வதற்கும் நாம் ஒரு போதும் ஆதர வழங்கப் போவதில்லை.
யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் அதிகளவில் பாதிக்கப்பட்ட மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களேயாகும்.
கிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் மூலம் இன்று அடிப்படை வசதிகள், உட்கட்டுமான அபிவிருத்தி வேலைகள் மேற்கொண்டும் வருகின்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக இம்மாகாணததில்; மூவின சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்காக அரும்பாடுபட்டு அதனை கட்டியெழுப்பி வருகின்றோம். இவ்வாறான நிலையில் மாகாண சபையின் அதிகாரங்களை குறைப்பதற்தோ அல்லது வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கோ இங்கு வாழ்ந்து வரும் மக்களும் விருப்பம் கொண்டிருக்கவில்லை. பிரிந்த மாகாண சபை முறைமையுடனான ஆட்சிமுறைமையிலையே இருப்பதற்கு இங்கு வாழ்ந்து வரும் மூவின சமூகங்களும் விரும்புகின்றனர் என்றார்.
உங்களின் இந்த திரில்லான கதையா கேட்டு கேட்டு புளிச்சிப்போச்சப்பா
ReplyDeleteஉங்கள் தலைவர் பாட்டு வாத்தியார் எப்போதும் இணைப்பு பிரிப்பு பற்றித்தான் பேசுவார் , நாட்டில் இதுதானா பிரச்சனை அரசாங்கம் 13 ஆவது திருத்தம் தொடர்பில் தற்போது பின்வாங்கியுள்ளது சந்தர்ப்பம் பார்த்து சண்டியர் வாய் திறந்துள்ளர் , இவ்வளவு நாளும் என்ன முட்டையிலே ........................................ மீண்டும் 13 வரும் அப்போது பார்ப்போம் யார் சாரதி யார் நடத்துனர் என்று.
ReplyDeletewe don't want to ur Opinion.u r mahinda & co sarvent.sat up & gat lost
ReplyDelete