Header Ads



வடக்கில் தேர்தலில் போட்டியிடவுள்ளவாகளுடன் அமைச்சர் றிசாத் சந்திப்பு

எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த  வேட்பாளர்களுக்கான நேர் முகப்பரீட்சை முடிவடைந்துள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை மாலை   அமைச்சர் றசாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது உத்தியோகபூர்வ வேட்பாளர்களின் விபரங்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே அமைச்சர் றிசாத் பதியுதீன் அறிவித்திருந்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தமது  விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர்

இந்த நிலையில் நாளை திங்கட்கிழமை  அகில இலங்கை  மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்கள் பொது ஜன ஜக்கிய முன்னணியின் பட்டியலில்  கையொப்பமிடவுள்ளதாக தெரியவருகின்றது.

அதே வேளை அ.இ.ம.காங்கிரஸ் வேட்பாளர்களுடனான சந்திப்பு ஒன்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்றுள்ளது.இதில் பேராதானை பல்கலைக்கழக அரசியல் துறை விரிவுரைாயளர் கலாநிதி அனீஸ்,மன்னார் மாவட்ட ஜமிய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஜூனைட்,வுனியா நகர சபை  முன்னால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆரிப்>முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ய யஹியான்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், உட்பட பலரும் இதன் போது தமது கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.


7 comments:

  1. Another division within us...!

    ReplyDelete
  2. when all these problems for mosques and Muslims(halal and head cover) are created by the BBS and Government not acting on it do we still have reason to back the government? What will the government say about our people contesting with government? Government will certainly say and tell the world there is no problem for Muslims thats why they contesting with us. Rizath must understand the sentiment of the majority Muslims in the country without considering his own personal advantages by gathering those few votes for government without a membership not confirmed when we all are divided.

    ReplyDelete
  3. மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளி புனித ரமழானில் இனவாத குண்டர்களால் தாக்கப்பட்டு பன்றி இறைச்சி வீசப்பட்ட விடயம், அரசாங்கத்தால் சட்ட ரிதியாக பதியப்பட்ட பல ஆண்டுகள் வரலாறு கொண்ட கிரேன்ட்பாஸ் பள்ளிவாசலை மூடச் செய்தமை, கடந்த 16ஆம் திகதி தெமடகொடையில் முஸ்லிம் வர்த்தகரின் இறைச்சி லொறி ஒன்று காவி உடை தரித்தவர்ளால் பகிரங்கமாக எரியூட்டப்பட்டமைக் கெல்லாம் யார் பொறுப்புக் கூறுவது?
    இலங்கையில் பாரியதொரு அழிவை ஏற்படுத்தும் விதத்தில் சில இனவாதக் குழுக்கள் மேற்கொண்டுவரும் காடைத்தனங்களை நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி அவற்றைக் கண்டு கொள்ளாது இருப்பதும். எது என்ன கெட்டாலும் கெடட்டும் வடமாகாண சபைத் தேர்தலை நடாத்தி வெற்றி கொள்வதில் கவனஞ் செலுத்தி வருவது முஸ்லிம்கள் மத்தியில் பாரியதொரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
    சமுக அழிவுகளை கண்டு கொள்லாது தேர்தல் வெற்றிதான் தமது எதிர்காலம் என்ற பகற்கனவு நீடிக்கும் என்பதில் அக்கறையாக இருக்கும் அரசு பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் கைங்கரியமாகவே உள்ளதாக முஸ்லிம் புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
    காலா காலமாக முஸ்லிம் அரசியல் வாதிகளை நம்பி முஸ்லிம்கள் ஏமாந்ததுதான் மிச்சம் ஏனெனில் அவர்கள் தங்கள் பதவிக்காகவும், சுகபோகங்களுக்காகவும் அரசாங்கத்திற்கு பண ரீதியாக விலைபோனவர்கள். அவர்களின் மூக்கணாங் கயிறு ஜனாதிபதியிடம் இருப்பதால் அவர்களால் நல்லது கெட்டதுக்குக் கூட வாய் திறக்க முடியாது. வசதி வாய்புக்கள் என்ற கயிற்றால் கட்டப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.
    இவ்வாறு சுயநல வாதிகளினை நம்பி முஸ்லிம் சமுகம் நட்டாற்றில் தத்தளிக்கும் நிலைமைகளே இன்று எற்பட்டுள்ளது. இன்று முஸ்லிம்களின் இவ்வளவு அழிவு நிலைக்கு வந்ததுக்கு முதற் காரணம் முஸ்லிம் அரசியல் வாதிகளேதான் இவர்கள் முழு முஸ்லிம் சமகத்தையுமே முட்டாள்களாக்கி விட்டனர். இந்த முட்டாள் தனங்களை சாதகமாக பயன்படுத்திய இனவாதிகள் தமது கட்டவுழ்த்து விடப்பட்ட அடாவடித்தனங்களை அதிகரித்த வன்னமேயுள்ளனர்.

    ReplyDelete
  4. உரிமை இழந்து உடமை சேர்க்க புறப்பட்டு விட்டார் இந்த சுயநல அரசியல் வாதி.

    அனீஸ் & ஹுனைஸ் பாரூக் உங்கள் மன சாட்சியை வைத்து கூறுங்கள் ஒரு சமூகத்தின் அரசியல் பயணம் ஒரு தனி நபரின் சுய நலத்துக்காக அவரின் பதவிக்காக மழுங்கடிக்கப் படுவதை எந்த வகையில் நியாயப்படுத்துகிறீர்கள்.

    ஹுனைஸ் நீங்கள் பாராளமன்றத்தில் பேசியதுக்கும் உங்கள் அரசியல் முன்னெடுப்புக்கும் முரன்பாடு உண்டல்லவா..??? நீங்கள் எல்லாம் மக்களை ஏமாற்றுகிறீர்களா..? அல்லது உங்களை எமற்றுகிரீர்களா..? எல்லாவற்றையும் தாண்டி அந்த எல்லாம் வல்ல இறைவனைத்தான் ஏமாற்றுகிறீர்களா...??

    மக்களே இந்த ராஜபக்ச அன் கோவுக்கு உயிர் கொடுக்க புறப்பட்டுள்ள இந்த சுயநல கும்பலை நிட்சயமாக நிராகரியுங்கள்.

    ReplyDelete
  5. Vadamahana Muslingali ethai vidda inum pala kodi pirachchinai ullathu so
    Vadamahana Muslingali pirachinaienai kattpathadku ulla One man Hon Risad Bathirudeen Minister than so Awasara Patta Wanam

    ReplyDelete
  6. சகோதரர்களே! எப்படிப் போபனாலும் பெரும்பான்மை அடிப்படை வாதிகளும் தற்போதைய இலங்கை அரசாங்கமும் எமது சமுகத்தை ஒடுக்கவே முயற்சிப்பார்கள் ,மேலும் காபீர் கூட்டுக் கட்சியில் தமது ஒற்றுமையைக் காண்பிக்கின்ற போது இயலாமை அரசியல் செய்கின்ற எமது பொம்மைத் தலைவர்களுடனும் அவர்களது கட்சிகளுடனும் இணைந்து அரசியல் ரீதியாக மிஞ்சியிருக்கின்ற சில அடைவுகளை நாம் பெற்றுக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்த நிலையும் எமக்கு உள்ளது. அரசாங்கத்தை விட்டு விலகவேண்டும் என பரவலாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் எனினும் அது மிக இலகுவான விடையமல்ல. எமது அன்புக்குரிய பல உயிர்களை போக்கி யுத்தம் செய்த பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபடுகின்ற போது ஏன் நாம் சென்ற வருடங்களில் எதிர் கட்சிகளில் இருந்து கொண்டு வாய்பிழந்தது போன்று இன்னும் செய்ய வேண்டும்.எனவே எமது பலத்தை எதிர் வருகின்ற தேர்தலில் காண்பிக்கலாம்,வரும் காலங்களில் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெரும் போதும் காண்பிக்கலாம். எனினும் அவ்வேளைகளில் நாம் தவரிழைத்து விடுகின்றோம் பின்னர் ஒவ்வொருவரும் தலையில் கைவைக்கின்றோம். எதிர்காலத்தில் மிகக் கவனமாக எமது வாக்குகளைக் கையாள்வோம்.....

    ReplyDelete

Powered by Blogger.