Header Ads



சவூதிஅரேபியா வட்டியற்ற கடனை வழங்கி இலங்கைக்கு பக்கபலமாக நிற்கிறது - அமைச்சர் எஸ்.பி.

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

இலங்கைக்கு சவூதி அரேபியா வட்டியற்ற கடன்களை வழங்கி பகக்பலமாக திகழ்ந்து வருவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க குறிப்பிட்டார். 

கண்டி கலாசார மண்டபத்தில் இன்று 01.07.2013 நடைபெற்ற மத்திய மாகாண மக்களுடனான  மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர்  தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வந்த 30 வருட யுத்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று எவரும் நினைகக்வில்லை. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் யுத்தம் முடிவடையும் என்று நம்பவில்லை. 

தற்போது நாட்டில் கொடுர யுத்தம் நிறைவடைந்து சமாதானம் நிலவுகின்றது. எனவே நாடு துரித அபிவிருத்தி கண்டு வருகின்றது. எமக்கு பல நாடுகள் உதவிகள் மற்றும் கடன் வழங்கி ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. இதில் குறிப்பாக சவூதி அரேபியா வட்டியற்ற கடன்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் என்றார். 

3 comments:

  1. உம்மைப் போல் இந்த நாட்டு ஆட்சியாளர்களும் நன்றிகெட்டவர்கள் ,சர்ந்தர்ப்பவாதிகள்

    ReplyDelete
  2. ஹலால் கடன் வாங்கி ஹலாலுக்கு எதிரா பாவிங்கடா நல்லா வருவீங்க

    ReplyDelete

Powered by Blogger.