Header Ads



உயரமான பெண்களை புற்றுநோய் அதிகம் தாக்குமாம்..!

புற்று நோய்கள் குறித்து பல விதமான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நியூயார்க்கில் உள்ள யெசீவா பல்கலைக்கழகத்தின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருந்தியல் துறை நிபுணர் ஜியோப்பிரி சி கபாட் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

மாத விலக்கு நிறைவு பெற்ற 20,928 பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் அதிக உயரமுள்ள பெண்களுக்கு புற்றுநோய் தாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களுக்கு மார்பக புற்று நோய், குடல் புற்று நோய், மற்றும் தோல் புற்று நோய் போன்றவை இருந்தன. பொதுவாக புற்று நோய்கள் ஹார்மோன்களால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

அதனுடன் மனிதர்களின் உயரமும் சேர்ந்து புற்றுநோய் ஏற்பட வழி வகுப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் உயரமான ஆண்களை விட பெண்களையே புற்று நோய் அதிக அளவில் தாக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கான காரணம் என்ன என்று தெளிவாக தெரியவில்லை. அதே நேரத்தில் அதிக உயரமுள்ளவர்களின் உடல் பாகங்களும் பெரியதாக உள்ளன. எனவே, அதில் உள்ள அதிக அளவிலான செல்களில் புற்று நோய் மிக விரைவில் பரவுவதாக கூறுகின்றனர்.

No comments

Powered by Blogger.