முர்சிக்கு ஆதரவான கணவன் வேண்டாம் - விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு
(Tn) முர்சிக்கு ஆதரவான கணவனிடம் விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு
எகிப்து ஜனாதிபதி முர்சிக்கு ஆதரவான கணவனிடம் விவாகரத்து கோரி 31 வயது பாடசாலை ஆசிரியை ஒருவர் நீதிமன்றம் சென்றுள்ளார்.
முர்சியின் கொள்கையை விமர்சிக்கும் தன்னை முறையற்று நடத்துவதாகவும் தாக்குவதாகவும் அவர் முறையிட்டு ள்ளார். கெய்ரோ குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கை தொடுத்துள்ள அந்த ஆசிரியை முர்சி பதவியேற்றது தொடக்கம் தம் இருவருக்கும் இடையில் பிரச்சினை நிலவுவதாக கூறியுள்ளார்.
“அவர் பிடிவாதமாக உள்ளார். எந்த முன்யோசனையும் இன்றி குருட்டுத்தனமாக முர்சியை ஆதரிக்கிறார்” என மேற்படி பெண் உள்ளூர் பத்திரிகையான அல் யூம் அல் சபாவுக்கு கூறியுள்ளார். இவ்வாறான ஒருவருடன் என்னால் தொடர்ந்து வாழ முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அரச ஊழியரான அவரது கணவர் இந்த விவகாரத்தை சாதாரணமாகவே பார்க்கிறார். “ஜனாதிபதி முர்சி தொடர்பில் எமக்கிடையில் இருக்கும் கருத்து வேறுபாடு குறித்து எனது மனைவியின் முடிவு நகைச்சுவையானது.
ஜனாதிபதி குறித்து மோசமான செய்தியை கூறிவரும் நச்சு தொலைக்காட்சிகளை பார்த்தே அவர் இவ்வாறு மாறியுள்ளார்” என 36 வயது கணவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 12 வருடங்களாக திருமண வாழ்க்கை நடத்தும் இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை.
அது சரி பர்தா போடச் சொல்லும் கணவன் கெட்டவன் நிர்வாணமாக நாடு வீதியில் நடனமாடவும் விபச்சாரம் செய்யச் சொல்லும் ஆண்கள்தான் இவளுகளுக்கு தேவை
ReplyDeleteThis is another bad effect from bad medias!
ReplyDelete