சதாம் ஹுசைனின் சகோதரர் புற்றுநோயினால் மரணம்
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சகோதரர், சபாவி இப்ராகிம், புற்றுநோயால் மரணம் அடைந்தார். ஈராக் அதிபர் சதாம் உசேன், 2006 டிசம்பரில் தூக்கிலிடப்பட்டார். இவருடைய சிற்றன்னையின் மகன், சபாவி இப்ராகிம். இவர், சதாம் உசேன் ஆட்சியில், புலனாய்வுத் துறைத் தலைவராகவும், அதிபரின் ஆலோசகராகவும் இருந்தார். அமெரிக்க தாக்குதலுக்குப் பின், சதாம் உசேன் உட்பட, 55 பேர் மிக முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதில், 36வது குற்றவாளி சபாவி இப்ராகிம். ஈராக் நீதிமன்றம், பல்வேறு வழக்குகளில், இவருக்குப் பல முறை மரண தண்டனை விதித்து உள்ளது.
சிரியாவில் தலைமறைவாக இருந்த சபாவி, 2005ல், ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்டார். பாக்தாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபாவி, புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நேற்று இவர், மருத்துவமனையில் இறந்தார். அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
Post a Comment