வினாத்தாள்களை முன்கூட்டியே வெளியிடும் ஆசிரியர்கள் சமூகத்திற்கு துரோகம் இழைப்பவர்கள்
(ஜெஸ்மி எம். மூஸா)
எழுத்தறிவித்தவன் இறைவனாவான். உலகின் முதல் ஆசான் கடவுள்;. மாதா பிதாவுக்கு அடுத்த நிலையினன் ஆசிரியன் என்றெல்லாம் ஆசிரியத்துவம், குருத்துவம் குறித்து எல்லா சமயங்களும் மேன்மைப்படுத்தியே கூறுகின்றன. யுத்த சூழ்நிலைகளின் பின்னும் இஸ்லாத்தின் நிலைப்பாட்டில் ஆசிரியத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டே வந்திருக்கின்றன.
சமயத்தூதுவர்கள் எல்லோரும் மிகச்சிறந்த ஆசிரியர்களாகவே இருந்திருக்கின்றனர். இலக்கியக் காலங்களிலும், புராணக் கதைகளிலும் அவைக்களப் புலவர்களாகவும், முனிவர்களாகவும் உயரிடம் வழங்கப் பட்டவர்கள் குருத்துவத்தின் மகிமை பேண வலம் வந்தவர்களே.
உலக வரலாற்றில் இவ்வாசிரியத்திற்கு என்றும் நன்மதிப்பு இருந்தே வருகிறது. தன்னை மேல் நிலையில் உயர்த்திவிட்ட ஆசான்களை மேலிடத்தில் வைத்து மதிக்கும் பலர் இன்றும் எம்முள் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அவ் ஆசிரியர்களின் நடவடிக்கையும் தம்மை நம்பி வந்த மாணவ சமூகத்தை உயர்நிலை ஆக்க வேண்டுமென்ற எண்ணமுமே.
இவைகள் ஒரு புறமிருக்க இத்தொழிலிற்கு லாயக்கற்றவர்களாகி ஒரு சிலர் இருந்து கொண்டு முழு ஆசிரிய சமூகத்திற்கும் அவக்கேடாக இருந்து வருவதுடன் ஏமாற்றுக்காரர்கள், காமுகர்கள், கள்ளர்கள், சமூகத்துரோகிகள் எனப் பட்டம் கொடுக்கப்பட வேண்டிய பதர்கள் இருந்து கொண்டு புனிதமான ஒரு சமூகத்தையே சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். இப்புனிதம் கெட்ட வேலைகளில் ஒன்றுதான் வினாத்தாள்களை முன்கூட்டியே வெளியிடும் துரோகச் செயலாகும்.
இலங்கையில் கடந்த சில வருடங்களாக உயர்தரப் பரீட்சை மற்றும் அமைச்ச திணைக்கள மட்டப் பரீட்சைகளில் முன்கூட்டியே வெளியாகி வந்த இவ்வினாத்தாள்கள் இப்போது வலய மட்டப் பரீட்சைகளிலும் வெளியாகத் தொடங்கியுள்ளன. கடந்த இரு வருடங்களுக்கு முன் உயர்தரப் பரீட்சையின் கணித, விஞ்ஞானத்தாள்கள் வெளியானமை புலனாய்வுப் பிரிவால் உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் சாட்டுப் போக்குக்காக ஒரே ஒரு வினாத்தாள் மட்டுமே நடத்தப்பட்டது. அவ்வாறாயின் அந்த ஒரு தாளைத்தானும் வெளியிட்ட ஆசிரியருக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது?
கல்முனைக் கல்வி மாவட்டத்திலுள்ள வலயம் ஒன்றில் அதிபர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சை இரண்டாந் தவணை வினாப்பத்திரங்களில் பெரும்பாலானவை முன்கூட்டியே வெளியிடப்பட்டிருந்தன. குறித்த பாடசாலை அதிபரும் ஆசிரியர் குழாமும் இதுபற்றி உடன் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்தனர். இந் நிகழ்வு கடந்த வாரம் இரண்டாந் தவணை விடுமுறை வழங்கப்பட்ட முஸ்லிம் பாடசாலை ஒன்றிலேயே நடந்தேறியது.
பரீட்சை வினாத்தாள் எடுப்பதற்கும் அதனை மதிப்பீடு செய்வதற்கும் உட்படுத்தப்படுபவர்கள் தொடர்பில் இலங்கை பரீட்சைத் திணைக்களம் மிகக் கடுமையான ஒழுக்கப் பிரமாணங்களை உள்ளடக்கி அதில் உறுதியளிக்க வைக்கிறது. தனது சமயத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் சாட்சியாக வைத்து ஒப்பமிடும் ஆசிரியர்கள் ஒரு சில சில்லறைகளுக்காக வினாத்தாள்களை வெளியிடுவது கேவலமானதே.
மேல் மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த இத்துரோகச் செயல்கள் வலயமட்டப் பரீட்சைகளையும் ஆட்கொண்டு வருவது அபாயகரமானது. பிரத்தியேக (ரியூசன்) வகுப்புக்களை நடாத்தும் ஒரு சிலர் தம்மிடம் வரும் மாணவர்கள் கூடுதலான புள்ளிகளைப் பெற வேண்டும், அவ்வாறு பெறும் போது தமக்கான கிறாக்கி அதிகரிக்கும் என்பதற்காகவே இதனைச் செய்கின்றனர். ரியூசன் செய்பவர்கள் வான்மை விருத்தி உடையவர்கள் என்ற கருத்தே பொதுப்படையாக இருந்து வருகிறது. வினாத்தாள்களை வெளியிட்டுத்தான் தம்இருப்பைத் தக்கவைக்க எண்ணும் இயலாமை உடையவர்கள் ஏன் இம்முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே எமக்கு எழும்புகின்ற நியாயமான கேள்வியாகும்.
மாணவர் சமுதாயத்திற்கு ஒழுக்கம், களவு, ஊழல் இவைகளின் வியாக்கியானங்களை எடுத்துக்கூற வேண்டிய ஆசிரிய சமூகத்தின் அங்கத்துவங்கள் 'வேலியே பயிரை மேய்ந்த கதையாக' மாணவ சமுதாயத்தை சீரழிவுக்கு இட்டுச்செல்ல வழிகாட்டுவது தண்டிக்கப்பட வேண்டியதாகும்.
பரீட்சை எதற்காக? இதன் நோக்கம் என்ன? இவைகளை மறந்து விட்டு ஒரு சில மாணவர்களின் நோக்குக்காக பெரும் மாணவர் சமுதாயத்தையே படுகுழியில் தள்ளும் இவ் இழிநிலை இனிமேலும் தொடராமல் காக்க வேண்டியது ஆசிரியர் ஒவ்வொருவரினதும் கடமையாகும். தம்மை அளவிடுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நிற்கும் மாணவர் சமூகத்தை தவறான பாதையில் இட்டுச் செல்கின்ற சுயநலமுள்ள, அறிவற்ற ஆசிரியர்கள் இத்தொழிலின் புனிதத்தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தாமல் ஒதுங்கி விடுவது சமூகக் கடமையாகும்.
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் இப்படிப்பட்ட ஆசிரியர்களான ஒவ்வொருவரும் சிந்தித்து மாற வேண்டியது ஓர் சமூகப் பொறுப்பே.
It’s a good article to the teachers’ duty. So, you have to keep promisses and secrets of code of ethics; also note my point to avoide …..
ReplyDeleteI have noted a lots of errors in the language of English papers from Grade 03 to Grade 13 distributed by the Principal Association of Sammanthurai – Zonal Education Office of Sammanthurai.
Please take note to correct the mistakes hereafter, the students were confused to answer to those English Question Papers. (spellimg mistakes, Printing mistakes, Questions’-Stuctual Disorders etc…
I can submit all errors from Grade 03 to 13 very soon in any article... the mistakes are taking place every year.
The said mistakes brought to me this year also about 2nd Term-Zonal Education Office Sammanthurai