விவசாயி கடித்து பாம்பு சாவு!
தன்னைக் கடித்த பாம்பை தானும் கடித்துத் துண்டங்களாக்கிக் கொன்றுள்ளார் விவசாயி ஒருவர். இது பற்றிய ருசிகரமான செய்தி வருமாறு:
நிலாப் துர்பே என்பது அந்த விவசாயியின் பெயர். போபாலை அடுத்த மச்சி போர்கான் எனும் கிராமத்தில் வசித்து வரும் அவர், தனது மாடுகளை மேய்த்துவிட்டு அந்தி நேரம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு ஒன்று கடித்துவிட, 'பாம்பு கடித்தால், அதைக் கொல்லாமல் விடக்கூடாது' என்ற கருத்தினைக் கொண்டிருந்த நிலாப் (30) உடனடியாக அந்தப் பாம்பைப் பிடித்து துண்டுத் துண்டாகக் கடித்துத் துப்பியுள்ளார்.
செய்தி அறிந்த ஊரார் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவருக்கு நச்சுமுறிவு மருந்து உட்செலுத்தப்பட்டது. இச்செய்தி குறித்து மருத்துவர் ராகுல் ஸ்ரீவத்சவ் கூறுகையில்," நான் இந்த மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களுக்கு பாம்புக்கடிக்கு சிகிச்சை அளித்திருக்கிறேன், ஆனால் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இதுவே முதன்முறை" என்று அதிர்வுடன் கூறினார். inneram
singam
ReplyDelete