Header Ads



அபகரிக்கப்படும் முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள்

(முஹம்மது றினாஸ்)
                            
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட புல்மோட்டை பிரதேசம் 1811ம் ஆண்டு தோணிக்கல் என்னும் பிரதேசத்தில் கால்பதித்த பூர்வீக குடிகளால் தேடிப்பெற்ற மிகப் பெரிய செல்வமாகும். இரண்டு நூற்றாண்டுகள் தாண்டிய வரலாற்றைக் கொண்ட புல்மோட்டை பிரதேசம் முற்று முழுதாக இஸ்லாமியர்களால் நிறம்பிய ஒரு முஸ்லிம் கிராமமாகும். 

சகல வளங்களையும் கொண்ட புல்மோட்டை பிரதேசத்தில் பூர்வீக குடிகளின் விவசாய காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதனால் மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

புல்மோட்டை மண்கிண்டி,கடற்கரைவீதி,பொன்மலைகுடா,யான்ஓயா அணைக்கட்டு வீதி,திருமலை வீதி, அநுராதபுரம் வீதி ஆகிய இடங்களில் இதிகாச வரலாறு தொடக்கம் பிரதேச மக்களால் பராமரிக்கப்பட்டு  வந்த காணிகள் கடந்த இருபது வருடங்களாக நாட்டில் ஏற்பட்ட யுத்த நிலை காரணமாக விவசாய செய்கைகள் பண்ண முடியாத நிலையில் இருந்தன.

அண்மைக்காலமாக பாதுகாப்பு படைகள் முகாம் புதிதாக அமைப்பதற்காகவும் பெரும்பான்மையினரை குடியேற்றும் நோக்கிலும் புனித வலயம் என்னும் போர்வையில் நாளுக்குநாள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு அரிசி மலை என்னும் பகுதியை தமது புனித பூமி என்று சொல்லிக்கொண்டு எல்லைக் கோடுகளும் போடப்பட்டுள்ளன.

புல்மோட்டை மண்ணின் காணிகள் இழக்கப்பட்டடுள்ளதையிட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் அமைச்சர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோர்களுக்கு அடிக்கடி  தெரியப்படுத்தியும், வருகை தந்த வேலை சுட்டிக்காட்டியும் இதுவரை உரிய தீர்வு இல்லாததையிட்டு காணியை இழந்த மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.        

3 comments:

  1. Where is Muslim Leaders, to whom you voted last time? Don’t believe Muslim parties, their aim is getting your votes and fulfills their needs. At least wake up now and support a party which can form an alternate government. Openly support them and try to get back your rights, when they capture power.
    If you support a Muslim party, they will sell all your votes to a major party for their positions and benefits. Major parties also will not bother you as you have not voted for them and they know how they can get your votes through an agent (Muslim parties) without giving your rights.

    ReplyDelete
  2. நம் முஸ்லிம்தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இதெட்கெல்லாம் எங்கு நேரமிருக்கிறது...? அவனுகளுக்கு தேவை பணம் பதவி.... முஸ்லிம் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை தவிர மாற்று மதத்தினர் மிகச்சிறந்த முறையில் செயல்படுகின்றனர். காரணம் நம் முஸ்லிம் தலைமைகள் கையாலாகாதவர்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.

    ReplyDelete
  3. slmc mp maar panaththitkum padhavikkume ullanar

    ReplyDelete

Powered by Blogger.