முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் பயனாளிகளுக்கு வீடுகளை கையளிக்கும் நிகழ்வு
(முறாசில்)
முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் பங்காளர் ஆற்றல் மேம்படுத்தல் முகாமையாளர் ஏ.எஸ்.ஏ.சலீம் தலைமையில் இன்று திங்கட் கிழமை மூதூரில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபன், மூதூர் மத்தியஸ்தர் சபை தவிசாளர் ஜே.எம்.இக்பால், முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பைசர் கான், பிரதேச முகாமையாளர் ஏ.ஏ.ஜாஸிர்,தடயம் சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் எம்.ஏ.ஜவாஹிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 30 வறிய குடும்பங்களுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன. இதேவேளை,முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் சேவையைப் பாராட்டி பயனாளிகளினால் நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.
Post a Comment