Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம் வர்த்தகர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

(பாறூக் சிகான்)

யாழ் .முஸ்லீம் வர்த்தகர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக யாழ் பொலிஸ் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் அனுராதபுர புற நகரான கெக்கிராவ பகுதியில் நடமாடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் (18.7.2013) யாழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

3 மாத காலமாக தலைமறைவாக உறவினர் ஒருவரது வீட்டில் வாழ்ந்து வந்த இச்சந்தேக நபர்  கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் யாழ் ஒட்டுமடம் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்ட வர்த்தகர் எம்.நிஹார் (வயது 56) என்பவரது கொலையை அடுத்து தலைமறைவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.