நிந்தவூர் பிரதேச செயலக கட்டிட திறப்பு விழாவில் அதிகாரங்கள் பாவிக்கப்பட்டதா?
சுமார் 44.2 மில்லியன் ரூப செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த 29.06.2013ம் திகதி அமைச்சர் ஜோன் செனவிரட்ன அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட நிந்தவூர் பிரதேச செயலக கட்டிடமானது அதன் திற்றப்பு விழாவில் தனிப்பட்ட நபர்களின் அதிகாரங்கள் பாவிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இதில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட முயற்சியின் கீழ் நிர்மாணிக்கப்படதாக கூறப்படும் இக்கட்டிகமானது அன்று பிரதேச செயலாளராக இருந்த MI ஹனிபா அவர்களின் தனிப்பட்ட முயற்சியின் கீழே உருவாக்கப் பட்டதாகும்.
யார் பெற்ற பிள்ளைக்கு யாரோ பெயர் வைப்பது போல இவ்விடயத்தில் மார்தட்டிக்கொள்வது அரசியல் அறியாமையாகும். உண்மையில் முன்னாள் பிரதேச செயலார் IM ஹனிபா மற்றும் முன்னாள் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா ஆகியோர்களின் என்னக்கருவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டதாக இங்கு உரையாற்றிய தற்போதய அரசாங்க அதிபர் ND அல்விஸ் அவர்கள் தெரிவித்தார்.
ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் இந்தக் கட்டிடத்தினை தனது அரசியல் செல்வாக்கின் கீழ் திறந்து வைக்க வேண்டும் என்பதில் உன்னிப்பாக செயற்பட்டதனை அமைச்சர் அவர்களின் உரையின் மூலம் அறிய முடிந்தது. மேலும் இதேவேளை இந்நிகழ்விற்கான அழைப்பிதழில் தனது பெயர் இடம்பெறவில்லை என ஆத்திரமுற்று மீண்டும் புதிய அழைப்பிதல் அட்டை மூலம் தனது பெயரை உள்வாங்கி கொண்டுள்ளார். இதனால் பிரதேச செயல ஊழியர்களும் பாராளுமன்ற உறுப்பினரை கடிந்து கொண்டுள்ளனர். இது உண்மையில் இந்த அலுவலகம் திறக்கப்பட வேண்டும் என்கின்ற உயரிய நோக்கமில்லாமல் தனது பெயர் இடம்பெற வேண்டும் என்பதனை இது பறை சாற்றுகின்றது.
மேலும் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கிய நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி றிபா உம்மா அப்துல் ஜலீல், அதிதிகளாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண அமைச்சர் MS உதுமாலவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் இன்னும் இதர அரசியல் பிரமுகர்கள் ஆகியோர்கள் பின்வரிசை ஆசனத்திலே அமர வைக்கப்பட்டனர். இதேவேளை இக்கட்டிடதிற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் IMஹனிபா அவர்களுக்கு பிரதான மேடையில் இடம் ஒதுக்கிடாது அவரை ஒரு மூலையில் அமர்த்தியிருந்தது இங்கு கட்டாயம் சுட்டிக்காட்டப்பட வேடியதொன்றாகும். ஆனால் முன்வரிசை ஆசனத்தில் அமைச்சரோடு பாராளுமன்ற உறுப்பினர்கள், அம்பாற அரசாங்க அதிபர் மற்றும் அமைச்சின் மேலதிகச்செயலாளர் ஆகியோர்கள் அமர்ந்திருந்தனர். இதேவேளை இவைகள் அனைத்தும் ஒருத்தரின் தனிப்பட்ட அரசியல் அதிகாரத்தின் திணிப்புத்தன்மையாக அவதானிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்நிகழ்வில் ஆரம்பத்தில் அமைச்சரை வரவேற்பதற்காக உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் பிரசன்னமாயிருந்த வேளை அவர்களால் அமைச்சரைவரவேற்காமல் போனதனையும் அவதானிக்க முடிந்தது. மேலும் நிந்தவூரின் முக்கிய அரசியல் வாதிகளான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் MAM தாஹிர் ஆகியோர்கள் காணப்படும் அதே வேளை அவர்களின் புகைப்படங்களோ, அல்லது அவர்களின் பெயர்களோ இடம் பெறக்கூடாது என்பதில் பிரதேச செயலகமும், குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உன்னிப்பாக செயற்பட்டுள்ளனர் என்பது நன்றாகப் புலப்பட்டது. இதற்கு சான்றாக வரவேற்புத் தோரனையில் நிந்தவூரின் 02 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் அவர்களின் புகைப்படங்களுமே காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. மேலும் நிந்தவூர் பிரதேச செயலாளர் அவர்களின் புகைப்படமும் கூட இதில் உள்வாங்கப்படவில்லை. இது தவறா அல்லது அதிகாரத்திணிப்பா என்பது இன்னும் புரியாத புதிராக இருக்கின்றது. இதேவேளை இத்திறப்பு விழாவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் நேரடிச்செயட்பாடுகளும் இதில் இடம் பெற்றிருந்தது.
மேலும் இத்திறப்பு விழாவில் குறுப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் அவர்களோடு அதிகமான நெருக்கத்தினப் பெற்றிருந்ததனால் ஏனைய அரசியல் வாதிகள் தங்கள் மக்களின் குறை நிறைகளை அமைச்சரின் கவனதிற்கு கொண்டு வர முடியாமல் செய்வதறியாது திகைத்துப்போய் இருந்தனர். இது தவிர அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தும் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தியதன் பிற்பாடு அவரை குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனது கையால் பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவரை தள்ளியதும் கமராவில் பதிவானது.
இவ்வாறான அரசியல் நாகரீகமற்ற செயட்பாடுகளைச்செய்யும் இந்த பாராளுமன்ற உறுப்பினர் எவ்வாறு எதிர்காலத்தில் அரசியல் மற்றும் இதர செயற்பாடுகளை சமூகத்தில் அபிவிருத்தி செய்யப் போகிறார்? எனவே சிறுபிள்ளைத்தன அரசியல் கைங்கரியத்தினை கைவிட்டு விட்டு தூர நோக்கு அரசியல் சிந்தனையில் தனது பயணத்தினை தொடர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
மு.கா.தலைமையும் இவ்வாறான மேல் தட்டு பலமில்லாதவர்களை முன்னிலை படுத்துவது தங்கள் தலைமையை தக்கவைப்பதுடன் முஸ்லிம் சமூகத்தின் மீது தங்கள் சவாரியை இலாவகமாக மேற்கொள்வதற்கும் வாய்ப்பாக அமைந்தாலும் இதனை தொடர்ந்தேட்சியாக செய்யமுடியாது ....என்பதை எதிர்காலம் உறுதி செய்யும்.
ReplyDeleteசகோதரர் சுலைமான் ராபி அவர்களே ???
ReplyDeleteஉங்களுடைய ஊடக தர்மம் இதுவல்லவோ !!!
நீங்கள் எழுதிருக்கும் வசனங்களில் அரசியல் வாதின் பெயரை குறிப்பிடாமல் புகைப் படம் மட்டும் இடட்டு தெளிவாக இவர்தான் அவருன்னு காட்டி உள்ளீர்கள் ??? இதுவே எமது பிரதேச எதிர்கட்சீன் தலைவர் செய்து இருந்து இருப்பார் ஆனால் உங்களால் எழுத முடிஉமா ??? நான் பொதுவானவன்??? உங்களுக்கு இருக்கும் தனிப் பட்ட கோபமே இந்த வரிகளுக்கு காரணம் என பகிரங்கமாக கூற என்னால் முடியும் ...... அது மட்டுமல்ல நாங்களும் ஆத்திரப் பட்டு ஊரிலுள்ள சிறிய அரசுயல் வாதிகளின் தனிப்பட்ட போக்கினையும், ஊழல் இணையும் இங்கு பகிரங்கமாக கூரவும்முடிஉம் .....அதை நான் செய்ய மாட்டேன் ...ஏன் என்றால் அரசியல் சாக்கடை எப்போதும் நறுமணம் தராது சுத்தம் செய்தால் மட்டுமே மணமின்றி இருக்கும் ..... சுத்தம் செய்யப் போனால் நிறையப் பேரை சுத்தம் செய்ய வேண்டும் .....
அது மட்டுமல்ல உங்களின் கருத்த்துக்களில் முரண்பாடுகள் இருக்கின்றதே ராபி ???
நீங்கள் ஒரு சந்தர்பத்தில் கூறி உள்ளீர்கள் ..... ஊரின் முக்கிய அரசியல் வாதிகளின் புகைப் படங்கள் சேர்த்துக் கொள்ளப் பட வில்லை அதற்ற்கு " அந்த அரசியல் வாதியும் பிரதேச செயலக்மும்தான் காரணம் என்று "
அதான் பிரதேச செயலகம் விரும்ப வில்லை என்றால் விட்டுட்டு உங்க வேலையைப் பாருங்களேன் ....... ஆளும் அரசில்தான் நீங்கள் சார்ந்தூரும் உள்ளனர் இல்லையா ??? உங்களால் முடிந்ததை செயுங்களேன் ...... அது சரி இந்த திறப்பு விழாவில்பிரதேச எதிர் கட்சித்தலைவருக்கு இடமே இல்லையாம் உண்மையா?????
i don't know about this but, very ugly
ReplyDelete